அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் – கோத்தபாய

0
2

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் – கோத்தபாய

2020 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி தனக்கு இருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷ அதற்காக தன்னைத் தெரிவு செய்தால் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றின் போது, மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர வேட்பாளராவதற்குப் பொருத்தமானவர் எவரும் இல்லை. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் காரணமாக துரதிர்ஷ்ட வசமாக அவரால் போட்டியிட முடியாது. மிகச் சிறந்த வேட்பாளர் யார் என்பதை அவரே முடிவு செய்வார். வெற்றிபெறக் கூடிய பொருத்தமான வேட்பாளர் யார் என்பது அவருக்குத் தெரியும். அவர் வேட்பாளராக என்னைத் தெரிவு செய்தால் நான் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கிறேன். இதற்காக எனது அமெரிக்க குடியுரிமையையும் கைவிட வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here