அபூ குதைரை தீ மூட்டி எரித்தவர்களுக்கு ஆயுள் சிறை

0
1

 Abu2012 இல் மேற்குக்கரையைச் சேர்ந்த 16 வயதான முஹம்மத் அபூ குதைர் எனப்படும் பலஸ்தீன இளைஞனை கடத்திச் சென்று சித்திரவதை செய்து, உயிரோடு எரித்த இஸ்ரேலியப் பிரஜையான யூஸுப் பின் டேவிட் என்பவனுக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

அபூ குதைரின் படுகொலை அப்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அபூ குதைர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள் இக்கொலைக்கு உறுதுணையாக இருந்த ஏனைய இரண்டு பேருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.

israel-palestiniansமூன்று இஸ்ரேலியர்கள் ஹமாஸினால் கொல்லப்பட்டமைக்கு பழி தீர்க்கும் முகமாகவே அபூ குதைரை கடத்திக் கொன்றதாக டேவிட் நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்தான். அபூ குதைரின் உறவினர்களிடம் நீதிமன்ற வளாகத்தில் மன்னிப்புக் கோரிய அவன், தான் செய்தது சரியானது எனவும் வாதிட்டான்.

இஸ்ரேலிய நீதிமன்றம் பலஸ்தீனர்களுக்கு நீதி வழங்காது என்ற நம்பிக்கையீனம் நீடிக்கும் நிலையில், நீதி மன்றம் இத்தீர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெரூசலத்திலுள்ள அல் ஜஸீரா செய்தியாளர் இது குறித்துக் கருத்து வெளியிடுகையில், டேவிடுக்கு இன்னும் மேல் முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் இருப்பதனால் பலஸ்தீனர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here