அமெரிக்கத் தூதரகம் மாற்றப்பட்டமைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு

0
0

இஸ்ரேலின் பாரம்பரியத் தலைநகர் டெல் அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு அமெரிக்கத் தூதரகம் மாற்றப்பட்டமைக்கு உலக நாடுகள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. ட்ரம்பின் தேர்தல் கால வாக்குறுதியொன்று நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் அதற்கு பலஸ்தீன மக்கள் கொடுத்த விலை மிகப் பாரியது எனவும் ட்ரம்பின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறுகின்றது எனவும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் தென்அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

டெல் அவிவில் மொத்தமாக 86 நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. ஏற்கனவே உலகின் 107 நாடுகள் இஸ்ரேலை சுதந்திர நாடாக ஏற்க மறுத்து வருகின்றன. இதேவேளை, வொஷிங்டன் தூதரகம் மாற்றப்பட்ட நிகழ்வில் 33 நாடுகளே பங்குகொண்டிருந்தன. 53 நாடுகள் இந்நடவடிக்கைகக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. கிழக்கு ஜெரூசலத்தை பலஸ்தீனர்கள் தமது தாயகமாகவும் எதிர்கால பலஸ்தீன நாட்டின் தலைநகராகவும் கருதுகின்றனர். வரலாற்று ரீதியாகவும் மத கலாச்சார ரீதியாகவும் ஜெரூசலம் பலஸ்தீனர்களின் பூர்வீக நிலமாகவும். இந்நிலையில், ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக ட்ரம்ப் அறிவித்தமை ஒரு பக்கத் தீர்மானம் என்றும், அகதிகளாய் வெளியேற்றப்பட்ட பலஸ்தீன் மக்களின் உரிமையை மறுக்கும் செயல் எனவும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

கெய்ரோவை தளமாகக் கொண்ட அறப் லீக், ஜெரூசலத்தின் மீது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச நாடுகளை வேண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here