அரசியலுக்குள் பிரவேசிக்க மாட்டேன் – சங்கக்கார

0
1

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க போவதில்லை என, முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சங்கக்காரவை களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை அக்கறையுடன் வாசித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கு தான் மதிப்பளிப்பதகவும் எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதுடன், அறக்கட்டளைகளுடன் இணைந்து சேவையாற்றுவதே தனது நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here