அரசியல் பழி வாங்கல் விசாரணை மேலும் 4 மாதங்களுக்கு நீடிப்பு

0
0

நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரிப்பதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் கமிஷனின் கால எல்லையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மேலும் நான்கு மாதங்களால் நீடித்துள்ளார்.

ஜனவரி 09 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் கால எல்லை ஜூலை 09 உடன் முடிவடைந்துள்ள நிலையில் அதன் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நவம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2015 ஜனவரி 08 இல் ராஜபக்ஷ அரசாங்கம் முடிவடைந்தது முதல் 2019 நவம்பர் 16 இல் ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்றது வரையான காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள், சுட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் ஊழியர்கள், இராணுவத்தினர், பொலிஸ் சேவைகளில் உள்ளவர்கள் எவரும் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டிருந்தால் அது தொடர்பில் விசாரிக்கவும் தகவல்களைப் பெறவுமென இந்தக் கமிஷன் நியமிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here