அரசு என்ன கூறினாலும் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறு

0
0

இந்தியா: நாடாளுமன்றக் கட்டிட தாக்குதலில் ஈடுபட்டதாக அப்சல் குருவுக்கு தவறாக தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இது தனிமனிதனான என்னுடைய கருத்து. இது தேசவிரோதம் ஆகாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Finance Minister Palaniappan Chidambaram speaks during an interview with Reuters at the IMF/World Bank annual meetings in Washington October 22, 2007. REUTERS/Jason Reed/Files

“அப்சல் குரு மீதான குற்றச்சாட்டுகளில் இருந்த சாத்தியக்கூறுகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறாக இருக்கலாம். நாடாளுமன்றக் கட்டிட தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு உள்ளதா என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

“அரசு தரப்பில் என்ன தான் கூறினாலும், கோர்ட் தவறான முடிவு எடுக்கும் போது என்ன செய்ய முடியும். ஏனெனில் அப்சல் குரு அரசால் குற்றம்சாட்டப்பட்டவர்.

“ஆனால் ஒரு தனி மனிதனாக, இந்த வழக்கு சரியாக கையாளப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

“அவர் நாடாளுமன்றக் கட்டிட தாக்குதலில் ஈடுபடவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை அவர் ஈடுபட்டிருந்தால், அவருக்கு பரோல் ஏதும் அளிக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்திருக்கலாம்.”

  • Siraj Ul Hassan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here