அலெப்போவுக்கான நிவாரண ஊர்திகள் மீது ரஷ்யா, சிரியா தாக்குதல்

0
2

முற்றுகையின் கீழுள்ள அலெப்போ நகருக்கான ஐ.நா.வின் நிவாரண ஊர்திகள் மீது ரஷ்யாவும் சிரியாவும் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதோடு, நிவாரண ஊர்திகள் 20 இற்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டுள்ளன.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. நிவாரணங்களுக்கான அமைப்பு என்பவை இத்தாக்குதலை அடுத்து தமது நிவாரணப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் பல்லாயிரக் கணக்கான அலெப்போ மக்கள் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

ரஷ்யா இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளபோதும் அலெப்போ நகர ஊடக மையம் அதனை உறுதிசெய்துள்ளது. மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட வைத்தியர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய சிவில் பாதுகாப்பு எனப்படும் தன்னார்வத் தொண்டர் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோக்களில் நிவாரண ஊர்திகள் பற்றி எரியும் காட்சிகள் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன. வான் தாக்குதல்கள் மூலமே அவை சாத்தியமானவை எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

அஸதின் மனிதாபிமானமற்ற இராணுவக் கும்பலுக்கு ரஷ்யப் போர் விமானங்கள் வழங்கும் ஆதரவு கண்மூடித்தனமானது. போர்க் குற்றங்களின் கீழ் விசாரணைக்கு உட்படக் கூடியவை என இந்தத் தன்னார்வத் தொண்டர் நிறுவனம் ரஷ்யாவை கடுமையாகக் கண்டித்துள்ளது.

A vest of the Syrian Arab Red Crescent hanging on a damaged vehicle, in Aleppo, Syria, Tuesday, Sept. 20, 2016 / Aleppo 24 news via APமீட்புப் பணியில் ஈடுபட்டவர்களும் வைத்தியர்களும் கூட இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளமை ரஷ்ய, சிரிய அரசாங்கங்களின் குரூரமான உள்நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

20 மிசைல் தாக்குதல்கள் வரையறுக்கப்பட்ட மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டன என நிவரணப் பணி அமைப்பின் தலைவர் ஹுஸைன் பதாவி உறுதிசெய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here