அழிவின் வாயிலைத் திறத்தல்

0
0

-திஸரனி குணசேகர-

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேச நிகழ்வு கொழும்பு ஷங்கிரீலா ஹோட்டலில் கடந்த தினம் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்பதாக விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற அறிவித்தலே இதுவென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கோட்டாபயவின் அரசியல் பிரவேசத்திற்கு பொறுத்தமான இடமொன்றாக ஷங்கிரிலா ஹோட்டலை ‘வியத்மக’ அமைப்பு தெரிவுசெய்தது. ஷங்கிரீலா என்பது ராஜபக்ஷாக்களின் அரசியல் பொருளாதார நோக்கினை வெளிப்படுத்தும் அடையாளமொன்றாகும். ராஜபக்ஷ நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் அவரது தலைமையின் கீழ் நாடு பயணிக்கும் பாதை பற்றிய முன்னறிவிப்பொன்றாக ஷங்கிரிலா ஹோட்டலின் வரலாற்றை கருத முடியும்.

இலங்கை தரைப்படை ஆரம்பிக்கப்பட்ட 1949ஆம் ஆண்டு காலம் முதல் காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்த பழைய பிரித்தானிய இராணுவக் கட்டிடமே அதன் மத்தியநிலையமாக காணப்பட்டு வந்துள்ளது. 63 வருடங்களின் பின்னர் அதாவது 2012இல் அவ்விடமிருந்த இராணுவ மத்தியநிலையம் அகற்றப்பட்டு பதிலாக அந்த நிலம் சொகுசு மாடிக்கட்டிடம் மற்றும் ஹோட்டல் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு ஷங்கிரீலா ஆசியா நிறுவனத்திற்கும் (ளூயபெசi டுய யுளயை டுவன)இஐவுஊ நிறுவனத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. ஷங்கிரீலா நிறுவனம் சீனாவுக்கு சொந்தமான நிறுவனம் என்பதுடன் ஐவுஊ நிறுவனம் இந்திய நிறுவனமொன்றாகும். இந்த நிலத்திலேயே ஷங்கிரீலா ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோட்டாபயவின் அரசியல் பிரவேச நிகழ்வு இடம்பெற்ற ஷங்கிரீலா ஹோட்டல் அவரது பொருளாதார நோக்கின் பெறுபேறொன்றாகும்.

இராணுவத்தின் மிகப்பழமை வாய்ந்த மத்தியநிலையம் அமையப்பெற்றிருந்த நிலம் சீனா மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதன் பிறகு அதுவரைகாலமும் ஓரிடத்தில் குவிந்திருந்த இராணுவப் படைப்பிரிவுகள் பல்வேறு இடங்களில் சிதறலடைந்தன. 2018 மே மாதம் 13ஆம் திகதி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரமான செய்தியொன்றின் படி, அமெரிக்காவின் பெண்டகனுக்கு ஒப்பான மிகப்பெரும் கட்டிடமொன்றை பாதுகாப்புத் தரப்புக்காக அகுரேகொட பகுதியில் நிர்மாணிப்பதே கோட்டாபயவின் கனவாகக் காணப்பட்டது. வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் போஷாக்கின்மையால் வாடுகின்ற மூன்றாம் உலக நாடொன்றில் இருந்துகொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பின்பற்றி பல மில்லியன் கடன்களை பெற்று, விண் முட்டும் மாளிகைகளை நிர்மாணிக்க முயற்சிக்கின்றவர்களின் பட்டியலில் கோட்டாபயவும் உள்ளடங்குகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

ஈழப் போரைத் தொடர்ந்து ஒன்றுபட்ட இலங்கையின் பொருளாதாரப் பெறுபேறுகள் நாட்டிற்கு கிடைத்துவிடும் என பெறும்பான்மையினர் நினைத்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பின் பெறுபேறொன்றாகவே 2010 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் ராஜபக்ஷாக்களுக்கு சிறப்பானதொரு வெற்றியைப் பெற முடிந்தது. எனினும் இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு பதிலாக தங்ளது பெயரையும் புகழையும் பரப்புகின்ற, நாட்டிற்கு எவ்வகையிலும் பொருந்தாத, பாரிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் திட்டங்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டார்கள். பெண்டகனைப் போன்ற மிகப்பெரும் கட்டிடமொன்றை இராணுவப் படைக்காக நிர்மாணிக்கும் கோட்டாபயவின் திட்டம் இந்த வெள்ளை யானை (பிரயோசனமற்ற) அபிவிருத்திக்கு சிறந்த உதாரணமாகும்.

ஓய்வூதியக் கொடுப்பனவை வேண்டி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் பல வருடங்களாக ஆர்ப்பாட்டம் செய்து வருவது சர்வசாதாரண நிகழ்வாகியுள்ளது. சட்டத்தின் படி, 10 வருட சேவைக்காலம் நிறைவடைய முன்னர் ஓய்வுபெறுகின்ற இராணுவ அதிகாரிகளுக்கும் 12 வருட சேவைக்காலம் பூர்த்தியாக முன்னர் ஓய்வுபெறுகின்ற இராணுவ வீரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. சிலபோது இந்தச் சட்டம் இலங்கை யுத்தத்தில் தள்ளப்பட முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம். எனினும் இந்தச் சட்டத்தின் பிரதிபலனாக போரின் போது அங்கவீனமுற்ற காரணத்தினால் உரிய காலத்திற்கு முன்பு ஓய்வுபெற நேரிட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ சுமார் ஒரு தசாப்த காலம் இந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியுள்ளார். இருந்தும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் ஓய்வூதியத் தொகைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இராணுவ மத்தியநிலையத்தை சீனா மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு விற்பனைசெய்து பெண்டகனொன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ராஜபக்ஷ, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அன்றாடம் இராணுவம் குறித்து ஜபிக்கின்றவர்களின் நிஜ முகமே இதுவாகும்.

யார் யாரைப் பின்பற்றுகிறார்கள்?

கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதாரக் கொள்கை தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் பிரதிபலிப்பாகும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்திருந்தார். ஆனால் உண்மை இதுவல்ல. இந்த அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமான இரண்டு தேர்தல்களிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக தங்களுடைய பொருதாரக் கொள்கையொன்றை நிர்மாணித்துக்கொள்வதில் இந்த அரசாங்கம் தோல்வியுற்றுள்ளது. இதற்குப் பதிலாக ராஜபக்ஷாக்களின் பொருளாதாரக் கொள்கையையே இந்த அரசாங்கமும் பின்பற்றி வருகின்றது.

நாடு முகம்கொடுத்து வரும் அபிவிருத்தி ரீதியான பிரச்சினைகளுக்கும் மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ள வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் 2018 உள்ள10ராட்சித் தேர்தலில் ஐதேகாவும் சுகாவும் கடுமையான முறையில் தோல்வியடைந்தமைக்கும் அடிப்படையாக அமைந்த காரணம் தங்களுடைய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கிக்கொள்வதற்கு பதிலாக தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷாக்களின் கொள்கைகளை பின்பற்ற முனைந்தமையாகும். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு, நாட்டைக் கடன்சுமையில் தள்ளும் நாட்டிற்கு தேவையற்ற மிகப்பெரும் கட்டிட நிர்மாணத் திட்டங்களை அமைத்தல் போன்றவையே ராஜபக்ஷாக்களின் பொருளாதாரக் கொள்கையின் மூலவேர்களாகும்.

இவையனைத்தும் அன்று எதிர்கட்சிகளின் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாயின. தனது அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துவதாகவும் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார். முன்னைய விமர்சனங்கள் மற்றும் வாக்குறுதிகள் அனைத்தும் தற்பொழுது மறந்துபோயுள்ளன. உலகிற்கு (குறிப்பாக சீனாவுக்கு) இன்னும் எமது நாட்டை கடன்பட வைத்து அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்கு பதிலாக வேறு அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பது விளங்குகிறது. கடும் மழை காரணமாக இரு வாரங்களுக்கு முன்னர் கடுவெல – பியகம வீதியிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது. கடுவெல – பியகம பாலத்தின் இரு பக்கத்திலும் களனி கங்கையின் கரைத்திட்டுப் பகுதிகள் உடைந்து விழும் அச்சுறுத்தலே இதற்கு காரணமாகும். இந்தப் பாலத்தை புனரமைத்த ஒப்பந்த நிறுவனத்தின் கவனயீனமான செயற்பாடுகளே இந்த நிலைமைக்கு காரணமாகும் என சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இது விடயம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் மு.னு ஈபட் மற்றும் புதழ்வர்கள் நிறுவனத்திற்கு பல தடவைகள் அறிவித்தும் இது தொடர்பில் இந்நிறுவனம் பொடுபோக்குடன் செயற்பட்டிருப்பதாகவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்கு முன்னர் அங்குள்ள பிரதான மற்றும் குறுக்கு வீதிப் பாலங்களை உரிய முறையில் உரிய காலப்பகுதியில் நிர்மாணிப்பது குறித்தே அவதானம் செலுத்தப்பட வேண்டும். ராஜபக்ஷாக்களின் திட்டத்தில் இப்படியான வழிமுறைகள் காணப்படவில்லை. ஆனால் சிறிசேன- விக்ரமசிங்க ஆட்சிபீடத்திடம் இது நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இவ்வெதிர்பார்ப்புகள் தற்பொழுது சிதைந்துபோயுள்ளன. பாலமொன்றை உரிய முறையில் வாக்குறுதியளித்த காலப்பகுதியில் புனரமைக்க முடியாமல் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயற்பாடுகள் பெரும்பான்மை மக்களின் மிக முக்கிய போக்குவரத்து தேவைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதற்கு தற்போதைய அரசாங்கத்தால் முடியாமல் போயிருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ தன்னை ஒரு சிறந்த நகர நிர்மாணியொருவராக காண்கிறார். குப்பை கூளங்களற்ற கொழும்பை நிர்மாணித்ததாக பீற்றினார். எனினும் அவர் கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காணாமலேயே குப்பை கூளங்களற்ற கொழும்பை அமைத்திருக்கிறார். கொழும்பிலுள்ள குப்பைகள் எல்லாவற்றையும் மீதொட்டமுள்ள பகுதிக்கு அனுப்பி அங்கு குப்பை மேடொன்றை நிர்மாணித்தார்.

மீத்தொட்டமுள்ளையில் 2 ஏக்கர் நிலத்தில் மாத்திரமே கழிவுகளை அகற்றுமாறு 2009ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும் கோட்டாபய இந்த நீதிமன்ற உத்தரவை கவனத்திற்கொள்ளவில்லை. மீதொட்டமுள்ள குப்பை மேட்டின் ஸ்தாபகர் வேறு யாருமல்ல கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். மீதொட்டமுள்ளையை நரகமாக மாற்றியே அவர் கொழும்பை அலங்கரித்தார். மீதொட்டமுள்ள அனர்த்தம் குறித்த முதலாவது அபாய சமிக்ஞை 2011இல் ஒலித்தது. பல வீடுகள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக மீதொட்டமுள்ள மக்கள் 2011இல் குப்பை மேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் ராஜபக்ஷ அரசாங்கம் அம்மக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது.

இவ்வாறே கோட்டாபய கொழும்பு நகரை அலங்கரித்தார். மீதொட்டமுள்ள குப்பை மேட்டுப் பிரச்சினையை தீர்ப்பதாக இவ்வரசாங்கமும் வாக்குறுதியளித்தது. ஏனைய வாக்குறுதிகளை போன்று இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் பட்டியலில் குவிந்தது. கோட்டாபயவின் வழிமுறையை பின்பற்ற சிறிசேன- விக்ரமசிங்க ஆட்சிபீடம் குப்பை மேட்டுப் பிரச்சினையை இன்னும் உக்கிரமடையச் செய்தது.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 40,000 வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க தீர்மானித்திருப்பதாக தெரிய வருகிறது. அன்று ஐதேகா ஆட்சிக்காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தலைமையில் 15 லட்சம் வீட்டுத் திட்டத்தின் மூலம் இந்நாட்டில் வீட்டுப் புரட்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவரது புதழ்வர் ஆர். பிரேமதாச வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக உள்ளார். 40,000 வீடுகளை நிர்மாணிக்கும் விடயம் அவருக்கு அவ்வளவு பெரிய காரியமாக அமையாது. சிறிசேன குரே எழுதிய ‘பிரேமதாசவும் நானும்’ எனும் நூலில் ‘கிழக்கில் இராணுவம் மீட்டெடுத்த பிரதேசத்தில் 1000 வீடுகளை நிர்மாணிப்பதே பிரேமதாசவின் முதலாவது திட்டமாகும். 3 மாதங்களில் 1000 வீடுகளை அவர் நிர்மாணித்தார். எனினும் அப்போது அவர் இறந்துபோனார்’ இந்த 1000 வீடுகள் 2ஆம் ஈழப்போராட்டத்தின் போதே நிர்மாணித்து முடிக்கப்பட்டது. இப்படியானதொரு முயற்சியும் அதற்குத் தேவையான பலமும் தற்போதைய அரசாங்கத்திடமோ குறிப்பாக வீடமைப்பு அமைச்சரான அவரது புதழ்வரிடமோ இல்லாதிருப்பது துரதிஷ்டமாகும்.

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஏன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறார்கள்? இதற்கான இயலுமைகள் இந்த அரசாங்கத்திற்கோ வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுக்கோ ஏன் இல்லை? 2015இல் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரத்தை ஒப்படைத்தது, இவ்வாறு மக்கள் தேவைகளுக்கு மாற்றாந் தாய் பிள்ளை போல் கவனிப்பதற்காக வேண்டியல்ல. யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களாலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு பதிலாக அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதில் அவதானம் செலுத்தி வருவதானது ராஜபக்ஷ வழிமுறையை பின்பற்றுவதற்கு ஒப்பான செயலாகும். இதன் பெறுபேறாக, 2018 உள்ள10ராட்சித் தேர்தலில் அடைந்த மிக மோசமான தோல்வியை காட்டிலும் எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை மக்கள் இந்த அரசாங்கத்திற்கு படு மோசமான தோல்வியை கொடுத்துவிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here