அவுஸ்திரேலியா 5ஆவது தடவையாக உலக சம்பியன்

0
0

அவுஸ்திரேலிய அணி 5 ஆவது தடவையாக கிரிக்கட் உலகக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
இன்று அவுஸ்திரேலியாவின் மெல்பன் கிரிக்கட் மைதானத்தில் சுமார் 90,000 பார்வையாளர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டின் உலகக்கிண்ண இறுதிப் போட்டி நடந்து முடிந்தது.
முதல் தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவான நிவ்ஸீலாந்து அணி கிரிக்கட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று களமிறங்கியது. எனினும் எதிர்பார்த்த அளவு அவ்வணியால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் இடம் கொடுக்கவில்லை. தமது அதிரடி பந்து வீச்சில் நிவ்ஸீலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 183 ஓட்டங்களுக்கு சுருங்கினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கட்களை மாத்திரம் இழந்து தமது இலக்கை அடைந்து கொண்டனர்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி ஐந்தாவது முறையாக உலக சம்பியன் ஆனது.
CBBQhDdU0AAu3Wb CBPd_OgVAAArnZz CBPf9lnUMAE115_ CBPfgCXUUAAAfBW CBQd6eEUQAAFNAR CBPPKSeUwAACjmcCBBQhDdU0AAu3Wb
 
 
 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here