ஆளும் கட்சியிலிருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகல்

0
0

ஆளும் கட்சியிலிருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு சற்று முன்னர் பதவி விலகியுள்ளனர்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமக் காரியாலயத்தில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளனர்.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பாராளுமன்ற விவகார அமைச்சர் மஹிந்த யாபா அபேகுணவர்தன, பொதுநிர்வாகம் மற்றும் நல்லாட்சிக்கான ராஜாங்க அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி இவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here