ஆஷூரா நோன்பு சத்தியத்தின் வெற்றிக்கு அடையாளம்

0
2

முஹம்மத் பகீஹுத்தீன்
முஹர்ரம் மாதம் 10 ம் நாள் (ஆஷுரா) நோன்பு நோற்பது மிகவூம் சிறந்த சுன்னாவாகும். “நபி (ஸல்) அவர்கள் மதீனாவூக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்றிருந்ததைக் கண்டார்கள். நீங்கள் ஏன் நோன்பு நோற்கிறீர்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது இது ஒரு மகத்தான நாளாகும். நபி மூஸாவையூம் அவர்களுடைய சமூகத்தையூம் அல்லாஹ் பாதுகாத்து பிர்அவ்னையூம் அவனது பட்டபாளத்தையூம் அழித்த நாளாகும். அதற்காக நபி மூஸா (அலை) நோன்பு நோற்றார்கள். எனவே நாங்களும் நோற்கிறௌம் எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவா;கள் : அப்படியெனில் மூஸா (அலை) வூக்கு உங்களைவிட நாம் அதிகம் அருகதையூடையவர்கள் எனக்கூறி விட்டு தானும் நோன்பிருந்ததுடன் தனது தோழர்களையூம் நோன்பிருக்குமாறு ஏவினார்கள்”.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : முஸ்லிம்

மேலும் “நபி (ஸல்) அவர்களிடம் ஆஷுரா நோன்பு பற்றிக் கேற்கப்பட்டது அது கடந்த வருடத்தில் இடம்பெற்ற பாவங்களுக்கு குற்றப்பாpகாரமாக அமையூம் என குறிப்பிட்டார்கள்”. அறிவிப்பவ ர்: அபூ ஹுரைரா (ரழி) நூல் : முஸ்லிம்
‘தாஸஷுஆ’ எனப்படும் 9ம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப்பட்டிருக்கிறது. “நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் 9ம் நாளும் நோன்பு நோற்பேன்”. முஸ்லிம்
மற்றொரு அறிவிப்பில் “இது ஒரு மகத்தான நாள், அல்லாஹ் மூஸாவையூம் அவரது சமூகத்தையூம் இந்நாளில் காப்பாற்றினான். பிர்அவ்னையூம் அவனது சமூகத்தையூம் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா இன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். நாமும் நோன்பு நோற்கிறௌம்” என்றார்கள்.
இந்த மாதத்தின் சிறப்பு அமலாக இருக்கும் ஆஷுரா நோன்பு பற்றி குறிப்பிடும் மேற்கூரிய ஹதீஸ்கள் அமைதி, சாந்தி நிலவூம் வாழ்வூ நிலைத்து நிற்கும் என்ற சுப செய்தியைத்தான் குறிப்பிடுகிறது.
பிர்அவ்ன் உலகில் தோன்றிய மன்னர்களில் மிகக் கொடிய ஒரு சர்வாதிகாரி. மாபெரும் அநியாயக்காரன். அமைதிக்கு பங்கம் செய்த கல்நெஞ்சம் கொண்ட மன்னன். இரத்த வெறி பிடித்த சண்டாளன். அவனின் அழிவை மேற் கூறிய ஹதீஸ் ஞாபகப்படுத்துகிறது. அநியாயம் அழியூம். நீதி வெற்றி பெறும். இறுதியில் சாந்தி சமாதானம் எங்கும் என்றும் நிலவூம் மார்க்கமாக இஸ்லாம் திகழும் என்ற அர்த்தத்தை அது தருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here