இடியப்பச் சிக்கலில் அரசாங்கம் | மீள்வதற்கான மார்க்கம் என்ன?

0
1

– ரவூப் ஸய்ன் –

ஜூலை மாதம் இலங்கை அரசியலில் எப்போதும் ஒரு பேசுபொருளாகவே இருந்து வருகின்றது. 1983 ஜூலை தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் இனவாதத் தாக்குதல் கட்ட விழ்க்கப்பட்டது. 1989 ஜூலை முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு எதிராக இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு முஸ்லிம்கள் நடுத் தெருவில் நிறுத்தப்பட்டனர். இப்போது 2017 ஜூலை 29 இல் ஹம்பாந்தோட்டை துறை முகத்தை 100 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட் டுள்ளது.

கடந்த வாரங்களின் அரசியல் காலநிலை ஜனாதிபதி மைத்திரியையும் அவரது நல்லாட்சி பரிவாரத் தையும் இடியப்பச் சிக்கலில் மாட்டியுள்ளது. இச்சூழ்நிலை தொடர்ந்தும் இறுக்கமடைவ தற்கே வாய்ப்புள்ளது. அதன் இறுதி முடிவாக ஆட்சி கவிழலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.

ஜூலை இறுதிப் பகுதியில் இலங்கை பெற் றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதனால் பல பில்லியன் ரூபாய்கள் இலங்கைக்கு நஷ்டம் ஏற் பட்டது. இலங்கையில் இயங்கும் இந்திய பெற்றோலியக் கம்பனி பல பில்லியன் இலாபமடைந்தது.

இலங்கையில் 1226 இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய பெற்றோல் நிரப்பு நிலையங்கள் உள்ளன. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 2530 பேர் நிரந்தர ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 202 நிரப்பு நிலையங்களே உள்ளன.

2016/2017 ஆண்டுகளில் இந்திய ஒய்ல் கம்பனியின் நிகர இலாபம் 81.3 பில்லியனாகும். இத்தனைக்கும் அதில் 171 நிரந்தர ஊழியர்களே உள்ளனர். அவர்களுள் 24 சிரேஷ்ட முகாமையாளர்களும் அடங்குகின்றனர். 40 நிரப்பு நிலையங்கள் கொழும்பில் மாத்திரம் உள்ளன. இந்திய ஒய்ல் கம்பனியின் ஒவ்வொரு ஊழியனும் 17.9 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டிக் கொண்டிருக்க, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் குதித்தனர். விளைவாக நாட்டின் பெருந்தொகை மக்கள் அல்லாடி நின்றனர். நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து அலைக் கழிந்தனர்.

கடும் ஊழலும் மோசடிகளும் நிறைந்த பெற்றோலியக் கம்பனி ஊழியர்களின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியமாக இருந்தது. இத்தருணத்தில் எண்ணெய் விநியோகத்தை இராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனாலும், ஜனாதிபதியினால் முடிவுக்குக் கொண்டு வர முடியாத பல அரசியல் பிரச்சினைகள் நீடிக்கவே செய்கின்றன. சைட்டம் அதில் முக்கியமானது.

கடந்த வாரங்களில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பெரும் துயரங்களுக்கு ஆளாகினர். சைட்டத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சுகாதார அமைச்சரோ அவரது அரசாங்கமோ வளைந்து கொடுக்கும் நிலையில் இல்லை.

மறுபுறம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல்கலைக்கழக சமூகம், இடதுசாரிகள் என்போரும் தமது போராட்டத்தைக் கைவிடும் நிலையில் இல்லை. இந்த இழுபறியினால் இறுதியில் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் என்ற கசப்பான உண்மை அரசாங்கத்திற்கு பிரதிகூலமாகவே அமையும்.

ஆகஸ்ட் 02 ஆம் திகதியிலிருந்து சைட்டம் அரசமயமாக்கப்பட வேண்டும் என்றும் வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் நாடளாவிய ரீதி யிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இணைந்த எதிர்க்கட்சியினர் தமது கடந்த கால நீசத்தனங்களை மூடி மறைத்து சைட்டம் நெருப்பில் குளிர்காய எத்தனிக்கின்றனர். ஏதோ அவர்கள் உத்தமர்கள் போன்று அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கிளர்ந்தெழுகின்றனர்.

மைத்திரி அரசுக்கு தலையிடியைக் கொடுக்கும் மூன்றாவது பூதம் இலங்கை மின்சார சபையிலிருந்து கிளர்கின்றது. திடீர்த் திடீரென நாட்டின் பல பாகங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. கரவலபிடிய மின்சார உற்பத்தி இயந்திரக் கோளாறே இதற்குக் காரணம் என பிரதியமைச்சர் அஜித் பெரேரா பாராளுமன்றத்தில் கூறுகின்றார்.

வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினாலும் பொதுவாக நாட்டில் ஏற்பட்டுள்ள மழைத் தட்டுப்பாட்டினாலும் மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரம் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இது அரசாங்கத்தின் திட்டமா அல்லது மின்சார சபையில் பணியாற்றும் மஹிந்த ஆதரவு அணியின் சதித் திட்டமா என்ற குழப்பம் பொது மக்களுக்கு உள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் ஏற் பட்டுள்ள கடும் வரட்சியினால் இலட்சக்கணக்கா னோர் நிர்க்கதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். குடிநீர் தட்டுப்பாடு தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இதற்கிடையில், கடந்த மூன்று மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு தொற்றுக்கு உட்பட்டோரின் தொகை பெருக்கல் விருத்தியில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் 115,605 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகரம் கொழும்பே முன்னணியில் உள்ளது. அங்கு 24,676 பேரும் கம்பஹாவில் 20,441 பேரும் களுத்துறையில் 6,886 பேரும் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே மாதத்தில் 15,886 ஆக இருந்த நோயாளர் தொகை, ஜூனில் சடுதியாக 24,978 ஆக உயர்ந்து, ஜூலையில் 29,055 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு வைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சின் நோய்த் தொற்றியல் பிரிவும் கல்வியமைச்சும் இணைந்து பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்ற போதும் டெங்கு அபாயம் நாட்டில் ஒழியவில்லை.

பொலன்னறுவையில் முழு நாட்டிற்கும் தேவையான அளவு அரிசி சேமிப்பில் உள்ளது. எனவே, அரசியை இறக்குமதி செய்ய வேண்டாம் என பொலன்னறுவை அரிசி மில் உரிமையாளர்கள்  அரசாங்கத்தைக் கோரியுள்ளனர். ஆனால், அரசாங்கம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அமைதியாக இருக்கிறது.

இத்தனை நெருக்கடிகளினதும் உச்சமாகவும் உணர்ச்சி வேகம் நிறைந்ததாகவும் இன்று பரப்பரப்பாகப் பேசப்படும் விவகாரம் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் ஆகும். ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களில் அர்ஜுன் எலோய்சியஸ் என்ற பெயர் பரவலாக அடிபடுகின்றது.

அர்ஜுன் மஹேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு விடுத்த அழைப்பாணைக்கு அவர் இன்னும் பதிலிறுக்கவில்லை. இத்தருணத்தில் ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்படுகின்றன. அவை ஆதார பூர்வமானவை எனவும் வலுவானவை எனவும் சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

ரவி மனச்சாட்சியும் நற்குணமும் உள்ள ஓர் மனிதர் என்றால் அவர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சரும் பிரபல தொலைக்காட்சிப் பாடகரு மான தயாசிறி தயாசேகர ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார்.

மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன் மஹேந்தி ரனை நியமித்தது பிரதமர் ரணில். அப்போது நிதி யமைச்சராக இருந்தவர் ரவி கருணாநாயக்க. மஹேந்திரன் மருமகன் அர்ஜுன் அலோய்சியஸும் இந்த ஊழல் மோசடியில் சம்பந்தப்படுகிறார். பல கோடிப் பெறுமதியான அரச நிதியை முறைகேடா கக் கையாண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை அர்ஜுன வும் அவரது மருமகனும் முன்னாள் நிதியமைச்ச ரும் எதிர்கொண்டுள்ள நிலையில், ரணிலைப் பகைத்துக் கொள்ள முடியாத திண்டாட்டத்தில் ஜனாதிபதி உள்ளார் என்று அதே ஆங்கிலப் பத்திரிகை எழுதுகின்றது.

தற்போதைய இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள நெருக்கடிகளைக் கூர்ந்து அவதானிக் கும்போது இலங்கையின் அரசியல் எதிர்காலம் எங்கு போய் முடியும் என்ற கேள்வி கறாராக எழுகின்றது. இருக்கும் பிரச்சினைகளை வினைத் திறனுடன் கையாள முடியாத ஒரு கையாலாகாத அரசாங்கம் புதுப் புதுப் பிரச்சினைகளை உருவாக் கிக் கொண்டே இருக்கின்றது. மக்களை மிகுந்த அசௌகரியத்திற்கும் தொந்தரவிற்கும் ஆளாக்கும் இன்றைய இத்தனை பிரச்சினைகளும் வெறும்  கட்சி அரசியலோடும் தனிநபர்களோடும் தொடர் பானவை. அப்பிரச்சினைகளுக்கு இறுதியில் விலை கொடுப்பவர்கள் மக்கள் என்பதுதான் பெரும் வாய்ப்புக்கேடாகும்.

முறைப்பாடுகள், ஆணைக்குழுக்கள், அறிக்கை கள் என்றவாறு நகரும் இலங்கை அரசியலில் நம் பிக்கைக்குரிய எந்த மாற்றமும் நிகழவில்லை. மஹிந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பையும் அதிருப்தியையும் மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பின் உருவாக்கிய சந்தர்ப்பவாதக் கூட்டு மெல்ல மெல்ல கலையத் தொடங்கியுள்ளது.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவோம், கல்வித் துறையிலுள்ள நெருக்கடிகளைத் தீர்ப் போம், 100 நாட்களுக்குள் எடுப்போம் கவிழ்ப்போம் என்று வாய்ச்சவாடல் விடுத்த இன்றைய ஜனாதி பதியும் பிரதமரும் பிரச்சினைகளுக்கு முன்னால் வாய் பிழந்து நிற்கின்றனர்.

நல்லாட்சியின் இரண்டரை ஆண்டுகளில் மக்க ளுக்குக் கிடைந்த நிவாரணம் என்ன? தேசிய பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வு என்ன? கடந்த ஆட்சியில் ஊழல் பேர்வழிகள் எவ ரேனும் தண்டிக்கப்பட்டனரா? நிதிக் குற்ற புலன் விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டதன் அர்த் தம் என்ன? எவென்ட் கிராண்ட் மிதக்கும் ஆயுதக் கப்பலுக்கு என்ன நடந்தது?

தோண்டி எடுக்கப்பட்ட வஸீம் தாஜுதீனின் பிரேதம் மீண்டும் புதைக்கப்பட்டது போல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை விவ காரங்களும் புதைக்கப்பட்டு விட்டன. மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அரசியல் மாற்றங் களெல்லாம் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

ஏற்கனவே நாடு பெரும் கடன் சுமையினால் திணறி வருகின்றது. மக்களின் அன்றாட வாழ்க் கைச் செலவீனம் ஏவுகணைகள் போல் உயர்ந்து செல்கின்றது. கல்வித் துறையில் பாரிய பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அரசியல்வாதி களின் ஊழலும் மோசடியும் இன்னும் ஓய வில்லை. இத்தனைக்கும் மத்தியிலேதான் நல்லாட்சி அரசாங்கம் அல்லாடி நிற்கின்றது. ஆட்டங் காணத் தொடங்கியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மைத்திரியின் தலைமையில் புதிய அரசாங்கம் உருவாக வேண்டும் என சுதந்திரக் கட்சியினரும் விலகிச் சென்றால் தனியாட்சி அமைப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியினரும் சூளுரைத்து வருகின்றனர்.

செப்டம்பர் ஒரு தீர்மானகரமான மாதமாக இருக்கப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை. 106 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியா, 95 ஆசனங்களைக் கொண்ட சுதந்திரக் கட்சியா என்ற இழுபறியில் சிறு கட்சிகள் சிக் குண்டு சீரழியப் போகின்றனவா? 16 ஆசனங் களைக் கொண்ட கூNஅ எந்தப் பக்கம் திரும்பப் போகின்றது. 6 ஆசனங்களைக் கொண்ட ஒஙக மஹிந்த தலைமையிலான இணைந்த எதிர்க்கட்சி யுடன் இணையுமா? இவையெல்லாம் நிச்சய மற்ற கேள்விகள்.

நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப் பட வேண்டும் என்ற மூல மந்திரத்திலிருந்தே சோபித தேரர் சமூக நீதிக்கான இயக்கத்தை ஸ்தாபித்தார். அது நல்லாட்சி என்ற ஒரு புதிய அத்தியாயத்தை இலங்கை அரசியலில் எழுத முயற்சித்தது. 2015 தேர்தல்களில் பெரும்பான்மை மக்கள் அதற்குப் பின்னணியில் இருந்தனர். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று அத்தனையும் உடைந்த கனவாயிற்று.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர் தல்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில் மீளவும் இனவாதமும் மதவாதமம் தலைவிரித்து தாண்டவமாடத் தொடங்கியுள்ளன. காத்தான் குடியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் கள் நூற்றுக்கணக்கானோரை சுட்டுக் கொல்வ தற்குக் கட்டளையிட்ட கருணா அம்மான் முஸ் லிம் ஆதிக்கத்திலிருந்து கிழக்கை மீட்பதற்கு தமிழர்கள் ஒன்றுபட வெண்டும் என்கிறார்.

கூட்டு எதிரணிக்கு இதன் பின்னர் முஸ்லிம் வாக்குகள் தேவைப்படாது என்கிறார் விமல் வீரவன்ச. கடந்த வாரத்தில் அரசாங்கம் வெளி யிட்ட 83 கறுப்பு ஜூலை கலவரம் குறித்த ஓர் அறிக்கை இவை எல்லாவற்றையும் விட சுவா ரஸ்யமானது. சட்டம், ஒழுங்கு அமைச்சு பாராளு மன்றில் சமர்ப்பித்த அந்த அறிக்கையில் ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்ட மொத்தத் தமிழர் களின் எண்ணிக்கை 7 என்று தெரிவித்துள்ளது. ஆக, 83 ஜூலையில் நடந்தது இனக்கலவரமா அல்லது குடும்பச் சண்டையா என்பது குழப்ப மாக உள்ளது.

இந்த அறிக்கைகளும் உணர்ச்சிகரமான கூற் றுக்களும் குரூரமான அரசியல் உள்நோக்கத் தைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் காலங்களில் சந்தர்ப்பவாதக் கூட்டுக்களை உருவாக்கும் கட்சிகள் இப்போது இனவாதத்தைக் கிளறுகின்றன. எல்லா அதிகாரங்களையும் கொண்டுள்ள ஜனாதி பதியோ அவற்றை முறையாகப் பிரயோகிக்கத் தெரியாமல் திண்டாடுகின்றார்.

அமைச்சரவையில் பிரேரணைகளைக் கொண்டு வந்து அங்கீகாரம் பெறுவது அவரது அகிம்சை மனோநிலைக்கு தெளிவான சான்று. ஆனால், நிறைவேற்று அதிகார முறையை இலங்கையின் தேச முன்னேற்றத்திற்குப் பிர யோகிப்பதற்கு அது சரியான வழியல்ல. அமைச் சரவையில் ஏற்கனவே தேசிய பொருளாதாரத் தைக் கையாள்வதற்கான ஒரு குழு பிரதமர் தலை மையில் நிறுவப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேசிய பொருளாதாரத்தைத்   தூக்கி நிலைநிறுத்துவதற்கு அக்குழுவால் எதனையயும் செய்ய முடியவில்லை. இப்போது ஜனாதிபதி மைத்திரி ஒரு தேசிய பொருளாதார சபையை உரு வாக்கும் பிரேரணையை முன்வைத்துள் ளார். அது ஜனாதிபதி தலைமையில் இயங்கும் எனவும் ஜனாதிபதி தவிர எட்டு உறுப்பினர்கள் அதில் அங்கத்துவம் வகிப்பார்கள் எனவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சையும் நீதியமைச்சையும் கையகப்படுத்த ஜனாதிபதி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும். ஜனாதிபதியின் இந்த நகர்வுகளை நோக்கும் போது ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முறுகல் நிலை முற்றி வருவது தெளிவானது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஆனால், பாராளுமன்றம் சட்டத்தைத் தாண்டி கலையும் வாய்ப்புள்ளது. மொத் தத்தில் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையர்களுக்கும் குறிப் பாக சிறுபான்மை மக்களுக்கும் நம் பிக்கையளிப்பதாக இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here