இந்த ஜமாஅத் என்னை வியப்பில் ஆழ்த்தியது!

0
0

 – முஹம்மத் பகீஹுத்தீன் –

குவைத் நாட்டைச் சேர்ந்த நாஸிர் துவைலா ஒரு பாராளமன்ற உறுப்பினர். அவர் ஆரம்பத்தில் ராணுவ அதிகாரியாக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். அதேநேரம் அவர் ஒரு தீவிர இஃவான் அரசியல் விமர்சகரும் கூட.

அவர் இஃவான்கள் குறித்து தனது டுவிட்டரில் வெளியிட்ட மனப்பதிவுகள்…

அமேரிக்கா, ரஷ்யா, அரபுலகம், இஸ்ரேல் என ஒட்டு மொத்த உலகமும் மற்றும் மனித உரிமை காவலர்கள், அநீதியின் பாதுகாவலர்கள், மதச்சார்பற்றவர்கள், லிபரல்வாதிகள் என முரண் தொடைகளும் இணைந்து இஃவான்களுக்கு எதிராக சதி செய்வதற்கு உடன்பட்டுள்ளன.

இஃவான்கள் மானுட நாகரிகத்தின் எதிர்காலத்திற்கு அபாயம் என்று கருதி அவர்களை கருவருக்கும் பட்டியலில் ஈரான் அடிப்படை வாதிகள், தீவிர ஸலபி சிந்தனையாளர்கள், அல்காயிதா, ஐசிஸ் பயங்கரவாதிகள், அல்ஜாமி தீவிரவாதிகள் என இன்னும் பலரும் இணைந்து கொள்கிறார்கள்.

(அல்ஜாமி இயக்கம் 1990ல் குவைத் மீதான ஈராக்கின் படையெடுப்புக்கு பின்னர் சவுதியில் உருவான அதிதீவிர ஸலபி அமைப்பு. கடும் அரசியல் விரோதப் போக்குடைய மற்றும் எத்தகயை ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுவதையும் சுத்த ஹராம் என்றும் கூறும் தீவிர சிந்தனை முகாம் கொண்டவர்கள்.)

இறை நிராகரிப்பாளர்களும், சில ஸலபி தீவிரவாதிகளும் சீயாக்களும் ஏனைய எதிரிகளும் இஃவான்களுக்கு எதிராக ஓரணியாய் திரண்டு வந்துள்ள காட்சியயை வரலாற்றில் இதற்கு முன்பு காணமுடியாது.

மத தீவிரவாதம் இல்லாத மற்றும் சகிப்புத்தன்மையை கண்டிப்பாக கடைபிடிக்கும் இஃவான்களுக்கு எதிராக உலகமே படையெடுப்பது ஏன் என்பது நிச்சயமாக ஒரு நடுநிலை அவதானியைக் கூட வியக்க வைக்கும்;. நிச்சயமாக இதற்குப் பின்னால் எதோ ஒரு ரகசியம் இருக்கலாம்.!!

ஜனாதிபதி முர்ஸியின் துன்பியல் வரலாறு இஃவான்களின் மறைக்கப்பட்ட சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது. அவர்கள் தனிநபர், குடும்பம், சமூகம் என்ற படிமுறை சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு ஜமாஅத் என்பது தெளிவு.

ஒரு சீரான முஸ்லிம் சமூகத்தை காண விழையும் இஃவான்களின் உருவாக்கப்பணியில் ‘பயிற்றுவித்தல் வழிமுறை’ தான் மிகவும் முக்கியமான புள்ளி என நான் நம்புகிறேன். இஃவான்கள் அபாயம் என்று பார்ப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

இந்த வழிமுறை மூலும் உருவாகும் முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வே எமது இலக்கு என்றும் அவனது தூதர் எமது முன்மாதிரி என்றும் அல்குர்ஆன் எமது சட்டயாப்பு என்றும் இறை பாதையில் மரணிப்பதே உயர்ந்த எதிர்பார்பு என்றும் விசுவாசிக்கும்.

ரப்பானிய சீர்திருத்தப் பாதையில் உழைக்கும் இஃவான்களை சர்வதிகார ஆட்சிகள் விரும்பாது. தலைவர்களை வணங்கும் கூட்டம் எப்போதும் எதிர்த்தே நிற்கும். சுயநலமிகள் என்றம் எப்பொழுதும் அவர்களுக்கு திரை மறைவில் சூழ்ச்சி செய்வர். யார் இவர்கள்? இவர்கள் தான் இஃவான்களின் தூய்மையான சமூக உருவாக்கத்தை எதிர்க்கும் கள்வர் கூட்டம்.

கிழக்கும் மேற்கும் சேர்ந்து இடையே சோரம் போன அரபுகளும் ஒன்றிணைந்து ஏன் எதற்காக இஃவான்களை எதிர்க்கின்றன என்று கேள்விக்கு பதில் தேடுவதற்கு பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை.

ஏனென்றால் அது பயிற்றுவித்தல் முறைவழி ஊடாக உருவாக்கத்தையும் சீர்கேடுகளுக்கு எதிராக போராடுவரையும் நீதியும் சமாதானமும் சுதந்திரமும் வாழவேண்டும் என்பதற்காக அர்ப்பணத்துடன் உழைப்பதையே மாற்றத்திற்கான வழி என்றும் ஈமான் கொண்டுள்ளது.

இஃவான்கள் தஃவாவை மையமாக கொண்டு செயற்படும் ஒரு ஜமாஅத். பள்ளிவாசல்களே அதன் களம். முஸ்லிம் சமூகமே அதன் இலக்கு. குர்ஆனும் சுன்னாவும் அதன் வழிமுறை. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதன் உறுப்பினர்களே. எனவே அவர்கள் மதச்சார்பற்றவர்களின் கடும் விரோதி.

ஜமாஅதுல் இஃவான்களிடம் காணப்படும் இன்னொரு விசித்திரமான விடயம் என்னவென்றால் அதை விட்டு விலகி வந்தவர்கள் அதன் வழிமுறையை ஒருபோதும் விமர்சிப்பதில்லை. நானும் (குவைத் பாராளுமன்ற உருப்பினர் நாஸிர் துவைலா) அந்த அமைப்பை விட்டு பிரிந்து வந்த ஒருவனே. இஃவான்களின் அரசியலை மிகக் கடுமையான முறையில் எதிர்த்து விமர்ச்சிப்பவன். ஆனால் அவர்களின் வாழ்வில் உண்மையாக நடந்து கொள்ளும் வாய்மை குணத்திற்கு நான் எப்போதும் அடிமை.

சிலர், நாஸிர் துவைலா இஃவான்களை பாதுகாப்பதில் தீவிரமானவர் என்று கூறுகின்றனர். ஆனால் நானோ அவர்களின் அரசியலை கடுமையா விமர்சிச்க்கும் ஒருவன். இதுதான் அந்த கூட்டத்திடம் காணப்படும் பெருந்தன்மையின் ரகசியம்.

எகிப்தில் அன்று நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு ஈரானிய ரஷ்ய சியேனிச அரேபிய அமரிக்க கூட்டு முயற்சியின் சதிப் புரட்சியே என்பதை நடுநிலை நோக்குள்ள ஒரு சராசரி மனிதன் நன்கு புரந்து கொள்வான்.

நாஸிர் துவைலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here