இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான ஆராய்வு

0
2

கிண்ணியா மஜ்லிஷ் அஷ்ஷுராவின் ஏற்பாட்டில் கிண்ணியா பிரதேச செயலகப் பரிவிற்குட்பட்ட பகுதியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களது வேண்டு கோளிற்கிணங்க கடந்த 19.04.2015 அன்று கிண்ணியா பொது நூலக கோட்போர் கூடத்தில் பல்தரப்பு கலந்துரையாடல் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
காணி உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வசதியளித்தல், அவசியமற்ற முகாம்களை அகற்றுதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வொன்று கூடலில் உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சர் M.S.தௌபீக், முன்னால் பாராளமன்ற உறுப்பினர் M.A.M. மஹ்ரூப், கிண்ணியா நகர சபை தவிசாளர் ஹில்மி மஹ்ரூப், குறிஞ்சாக்கேணி பிரதேச தவிசாளர் S.L.M. ஜவாதுள்ளாஹ், கிண்ணியா பிரதேச செயலாளர் M.C. அனஸ், சட்டத்தரனிகளான அனிப்லெப்பை (கி.மா.ச.ஆ), றிஸ்வான் உட்பட காணி உரிமையாளர்கள், முகாம்கள் அமையப் பெற்றுள்ள பிரதேச மஸ்ஜித் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.
இக்காணிகள் விடயத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதோடு பிரதேச செயலாளர் அவர்களால் இக்காணிகள் ஒவ்வொன்றினதும் தற்போதைய நிலை குறித்த விளக்கம் வழங்கப்பட அரசியல் தலைவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் இவ்விடயம் குறித்து எடுத்துள்ள, நடவடிக்கை பற்றி எடுத்துக் கூறியதோடு தொடர்ந்தும் தாம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் பற்றியும் கூறினர். சட்டத்தரனிகள் இக்காணிகள் குறித்த சட்ட ஆலோசனைகளை வழங்கினர். மஜ்லிஷ் அஷ்ஷுராவின் காணி, மீள்குடியேற்ற பிரிவின் வழிகாட்டலில் காணி உரிமையாளர்களுக்கான குழு அமைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் இவ்விடயத்திற்கான தீர்வினைக் காண முயற்சிப்பதென அனைத்துத் தரப்பினராலும் தீர்மானிக்கப்பட்டது.
Kinniya 3 Kinniya 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here