இலங்கையில் தவக்குல் கர்மான் (படங்கள் இணைப்பு)

0
2

IMG_9107

அனஸ் அப்பாஸ்

பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமைகளுக்காக வன்முறையில்லா போராட்டங்களினூடாக சமாதானத்துக்கு பங்களிப்பு செய்து 2011 நோபல் பரிசு பெற்ற யெமன் நாட்டுப் பெண்மணி தவக்குல் கர்மான் கடந்த 16ஆம் திகதி இலங்கை வந்திறங்கினார்.

IMG_907716ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கலாபீடத்தின் 3ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே அவர் இலங்கை வந்திருந்தார். இதில் இன்று (18) IMG_9079களனி பல்கலைக்கழகத்திலும் சிறப்புரை ஆற்றியதுடன், அங்கவீனமான மாணவர்களையும் பார்வையிட்டார். தனது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட “தவக்குல் கர்மான் பவுண்டேசன்” மூலமாக தான் இம்மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க எதிர்பார்ப்பதாகவும் அதில் கூறினார்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் மற்றும் அல் இஸ்லாஹ் அரசியல் செயற்பாட்டாளரான இவரது முழுப்பெயர் தவக்குல் அப்துல் ஸலாம் காலித் கர்மான் என்பதாகும். IMG_9089யெமன் தாயிஸ் பிரதேசத்தில் 1979 பெப்ரவரி 7ஆம் திகதி பிறந்த இவர் யெமன் நாட்டின் முதலாவது பிரஜையாகவும், முதல் அரபுப் பெண்மணியாகவும், நோபல் பரிசு பெற்ற இரண்டாவது முஸ்லிம் பெண்மணியாகவும், உலகிலே மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவராகவும் 2011ஆம் தனது 32ஆவது வயதில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமைகளுக்காக வன்முறையில்லா போராட்டங்களினூடாக சமாதானத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக நோபல் பரிசு பெற்றவரும் ஆவார்.

“இரும்புப் பெண்மணி” , “புரட்சியின் தாய்” என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்ட இவர் பல தடவைகள் மனித நல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக யெமன் அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டவர். “கை விலங்கில்லா பெண் ஊடகவியலார்கள்” என்ற அமைப்பை உருவாக்கி தனது எழுத்தாற்றல் மூலம் யெமனில் மாபெரும் அரசியல் மாற்றம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு உயிரச்சுறுத்தல்கள் ஏற்பட்டதன் காரணமாக துருக்கி அரசு இவருக்கு துருக்கிய பிரஜாவுரிமை வழங்கியதுடன் தொடர்ந்தும் துருக்கியில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
IMG_9021

IMG_9099IMG_0029 IMG_0047 IMG_0087 IMG_9044 IMG_9083 IMG_9118

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here