இலங்கையில் Coca-Cola உற்பத்திக்கு தடை, திணறும் அமெரிக்கா!

0
1

கடுவலை பிரதேசத்திலுள்ள Coca-Cola நிறுவன தொழிற்சாலையின் சுரங்க எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் நீர்வழங்கல் அதிகார சபையால் குறிப்பிட்ட பிரதேசத்தில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு குறித்த நீரை மக்கள் பாவனையிலிருந்து தடுக்கப்பட்டதோடு, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் நீரியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடள் இணைந்து குறித்த நீர் சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய் உறிஞ்சப்பட்ட பின்னரே மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.
இதனால் மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அதிகார சபை Coca-Cola நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்துள்ளதுடன் சுமார் ஒரு பில்லியன் ரூபா வரையில் அபராதமும் விதித்துள்ளது.
சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையினால் குழப்பமடைந்துள்ள Coca-Cola நிறுவனத்தினர் தற்போது மத்திய அரசாங்கத்திற்கு அமெரிக்க அதிகாரிகளின் ஊடாக கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் இலங்கை அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்து வருகின்றார். அதில் அவர்கள், அபராதத் தொகையைக் குறைக்குமாறு அழுத்தம் பிரயோகிப்பதாகவே இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதனால் அபராதத் தொகையைக் குறைக்க முடியாது என அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இருப்பினும், ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்துள்ளதாக Coca-Cola நிறுவனம் தெரிவிப்பதால் அபராதத் தொகையைக் குறைக்குமாறு அமெரிக்க அதிகாரிகளின் ஊடாக தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here