இலங்கையைத் தரமிறக்கியது உலக வங்கி

0
0

உலக வங்கி புதனன்று (01) வெளியிட்ட தரப்படுத்தலில் இலங்கை தாழ்நிலை மத்திய வருமானமுடைய நாடாக (Lower-Middle Income) தரமிறக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜூலை முதலாம் திகதி உலக வங்கி இந்தத் தரப்படுத்தலை மேற்கொள்கிறது. 2020-2021 காலப்பகுதிக்கான தரப்படுத்தலின் படி இலங்கை உயர்நிலை மத்திய வருமான நாடு (Upper-Middle Income) என்ற தரத்திலிருந்து தாழ்நிலை மத்திய வருமான நாடாக தரமிறக்கப்பட்டுள்ளது. உயர்நிலை மத்திய வருமான நாடாக தரமுயர்த்தப்பட்டு ஒரு வருட காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இம்முறைய தரப்படுத்தலில் இலங்கையுடன் சூடானும் அல்ஜீரியாவும் தரமிறக்கப்பட்டுள்ளன. 07 நாடுகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

மொத்தத் தேசிய உற்பத்தியில் தலா வருமானத்தைக் கொண்டே தரப்படுத்தல் நிகழ்கிறது. தலாவருமானம் 4046 டொலர் முதல் 12535 வரையுள்ள நாடுகள் உயர்நிலை மத்திய வருமான தரத்திலும், 1036 முதல் 4045 வரையுள்ள நாடுகள் தாழ்நிலை மத்திய வருமான தரத்திலும் தரப்படுத்தப்படுகின்றன. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தி மீதான தலாவருமானம் 2019 இன் 4060 டொலரிலிருந்து 2020 ஜூலை 01 இல் 4020 ஆகக் குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here