இலங்கை சீனாவின் கடன் பொறியில் இல்லை என ஜனாதிபதியே கூறியுள்ளார் என்கிறது சீனா

0
15

சீனா இலங்கையை கடன் பொறிக்குள்ள சிக்கவைக்கவில்லை என இலங்கை ஜனாதிபதியே பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார் என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஸோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் மேம்பாடுகளுக்கும் சீனா பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தினதும் அம்பாந்தோட்டை துறைமுகத்தினதும் துரிதமான வளர்ச்சி போன்ற பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சியிலான திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளது. இந்தத் திட்டங்கள் இரு நாடுகளதும் ஒத்துழைப்புக்கும் இருநாட்டு மக்களினதும் நன்மைக்கும் பெரிதும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் கருத்து வெளியிடும் போது பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சியில் இதுவரை எவரும் கடன் பொறியில் சிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here