இலங்கை வரலாற்றில் அரச செலவினத்துக்கு அதிகூடிய ஒதுக்கீடு

0
0

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைந்திருப்பதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார இவ்வாறு குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான செலவீனமாக 6459 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டில் ஜனாதிபதிக்கு 9983 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 3527 மில்லியன் ரூபா அதிகமாகும்.

அதேபோல பிரதமரின் செலவினமாக 2017ஆம் ஆண்டில் 1254 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீடுகள் 1772 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கான ஒதுக்கீடுகள் 518 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு பொது மக்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 9 பில்லியனால் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரசாங்க செலவினங்களைக் கொண்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைந்துள்ளது. இதனால் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையும் அதிகரிக்கவுள்ளது. கடன்பெறும் தொகை 1800 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்துள்ள கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கோரும் ஆட்சியாளர்கள், தாம் மாத்திரம் எந்தவித அர்ப்பணிப்பும் இன்றி தமக்கான ஒதுக்கீடுகளை அதிகரிப்பதாக அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, யுத்த காலத்தில் பாதுகாப்பு செலவினத்திற்கு ஒதுக்கிய 250 பில்லியன் ரூபா நிதியை, 2018 பட்ஜட்டிலும் ஒதுக்கியமைக்கு, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here