இலங்கை வரலாற்றில் முதல் முறையாக "LIFE TALK"

0
0

13087770_843315212481405_8134402567299040831_nஅனுபவங்களை பகிரும் மேடை, இது அனுபவசாலிகளின் மேடை. சமூகப் பங்களிப்பில் தலைசிறந்தவர்களின் அனுபவங்களை நாளைய தலைவர்களின் உள்ளங்களில் பதிக்கும் புதிய ஆரம்பம். இதன் கன்னி முயற்சி பெரும் பாராட்டுடனும், வரவேற்புடனும் நடைபெற்று முடிந்தது.

OMSED நிறுவனம் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஆகிய இணைந்து நடாத்தும் LIFE TALK நிகழ்ச்சித் தொடரின் முதலாவது நிகழ்ச்சி கடந்த 11ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சமூகத்தில் சாதனை படைத்தவர்களை அழைத்து அவர்களது வாழ்க்கை அனுபவங்களைப் இளம் சமூகத்தினரோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த நிகழ்ச்சித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IMG_1304இந்த நிகழ்ச்சி இளம் சமூகத்தினருக்கு மிகவும் பிரயோசனமாக அமையும் என தான் எதிர்பார்ப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை இளைஞர்கள் பிரயோசனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் அஸ்ஸெய்க் எம். எச். எம். ஸமீல் அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகின்றார்.

நிகழ்வின் பிரதான பேச்சாளராக கலந்து கொண்ட ஜமாஅதுஸ் ஸலாமாவின் பொருளாளராக பணியாற்றும் வைத்தியர் ஸைபுல் இஸ்லாம் தனது வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களோடு பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் இறுதியில் சுவாரஷ்யமான கேள்வி-பதில் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.IMG_1404

IMG_1310 IMG_1376 IMG_1396 IMG_1411 IMG_1392 IMG_1405IMG_1382 IMG_1345IMG_1373 IMG_1381IMG_139113138886_853210874825172_9178794080294371111_n 13177757_853210938158499_7269840724797329250_n 13166093_853343254811934_4422592641596099890_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here