இஸ்ரேல் யூதர்களுக்கு மட்டுமான நாடு – நெடன்யாஹு

0
1

இஸ்ரேல் இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்துப் பிரஜைகளுக்குமான நாடு அல்ல. மாறாக, யூதர்களுக்கு மட்டுமான நாடு என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெடன் யாஹு தெரிவித்துள்ளார். நாட்டில் வாழும் பலஸ்தீன அறபு மக்கள் குறித்து கருத்து வெளியிட்டபோதே நெடன்யாஹு இவ்வாறு குறிப்பிட்டார்.

இஸ்ரேல் எல்லைக்குள் வாழும் பலஸ்தீனர்களை இஸ்ரேல் பாகுபாடாக நடத்துகின்றது. சமஉரிமையுள்ள பிரஜைகளாக நடத்தவில்லை என்ற விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நெடன்யாஹு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு சட்டம், இஸ்ரேல் யூதர்களுக்கு மட்டுமான நாடு என்று கூறுகின்றது. அவ்வாறு நாம் நிறைவேற்றிய சட்டத்தின்படி இங்கு வாழும் அனைவருக்குமான நாடாக இது இருக்க முடியாது. மாறாக, யூதர்களுக்கு மட்டுமான நாடு என்று நெடன்யாஹு தெரிவித்தார். அதேவேளை, பிரிக்க முடியாத ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகராக உள்ளது என்றும் நெடன்யாஹு குறிப்பிட்டார்.

பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக இஸ்ரேல் எனப் பிரகடனப் படுத்தியுள்ள யூதர்கள், பலஸ்தீன மக்களின் தாயகத்தில் பலஸ்தினர்களுக்கு சமவுரிமை இல்லை என்று வாதாடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here