ஈராக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல்

0
0

ஈராக்கில் கடந்த ஒரு வாரமாக அதிகாரத்திலுள்ள அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அரசியல் அமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இணைந்து கலகம் விளைவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் பக்தாதிலும் புறநகர்ப் பகுதியிலும் ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்ற வரும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோர் தொகை அன்றாடம் அதிகரித்து வருகின்றது. நாட்டிலுள்ள சர்வதிகார ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகும். இதனால், ஈராக்கின் பாதுகாப்புச் சூழல் பின்னடைந்துள்ளது.

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமைகளில் நிலவிய கோளாறுகள் இதுவரை சீர்செய்யப்படவில்லை. சர்வதிகாரம் தலைதூக்கியுள்ளது. வழமை நிலை படிப்படியாகத் திரும்பி வந்தபோதும் மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி கண்டுள்ளது. சத்தாமின் சர்வதிகார ஆட்சியை ஒத்த புதியதொரு சர்வதிகாரம் நாட்டில் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐசிஸ் பயங்கரவாதம், சிவில் யுத்தம், குற்றச் செயல்கள் என்பன பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளபோதும் ஈராக்கில் ஜனநாயக ஆட்சி முறையொன்று மலரவில்லை என எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here