ஈரான்-சவூதி சொற் போர்

0
2

பிராந்தியத்தில் ஈரான் இஸ்ரேலை விட ஆபத்தான நாடு என சவூதி மன்னர் சல்மான் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு ஈரானின் ஆன்மீகத் தலைவர் என மதிக்கப்படும் கொமைனியின் ஆலோசகர் பிரௌஸாபாதி மறுப்புத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் இஸ்ரேலை விட ஆபத்தான நாடு சவூதி அறேபியா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அறேபியா, ஈரானுக்கு எதிராக ஏதேனும் போரில் இறங்கினால் அதற்குப் பதிலளிக்கும் சக்தி ஈரானுக்குள்ளது என்று அவர் சூளுரைத்துள்ளார். மோதலை ஆரம்பித்தால் அவர்கள் அமெரிக்கப் போர் விமானங்களுடனும் சூடானின் விமான ஓட்டிகளுடனும்தான் எம்மை எதிர்கொள்வர். ஆனால், நாம் அவர்களை எதிர்கொள்வதற்கான சுய ஆற்றலைப் பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஈரான் மீது ஆயுதத் தடை விதிக்குமாறு சவூதி அறேபியா ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஈரான்-சவூதி ஆகிய இரு நாடுகளும் இத்தகைய கடும் சொற் போரில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here