ஈஸ்டருக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீதான் வன்முறைகள். சூத்திரதாரிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை

0
0

21/4 குண்டுவெடிப்புக்களின் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கண்மூடித்தனமான வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமல் இருப்பது தொடர்பில் முஸ்லிம் சமூகம் ஏமாற்றமடைந்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிட்டிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொட்டுவ, கினியம, பூவல்ல, அசனாகொட்டுவ, கல்ஹினியாகட்டுவவிலும், சிலாபம், மினுவாங்கொடை, குளியாப்பிட்டிய என 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இனவாதக் கும்பல்களால் வேட்டையாடப்பட்டன.

இதனால் குருநாகல் மாவட்டத்தில் 23 பள்ளிவாசல்களும் ஒரு அரபுக் கல்லூரியும், புத்தளம் மாவட்டத்தில் 3 பள்ளிவாசல்களும் கம்பஹா மாவட்டத்தில் ஒரு பள்ளிவாசலும் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகின.

மினுவாங்கொடை பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 27 வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியிருந்தன. இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் நாமல் குமார, அமித் வீரசிங்க, டான் பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நேரடிச் சாட்சியங்களும் வீடியோக்களும் இருந்த போதும் தாக்குதலுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலரை பிங்கிரிய பொலிஸில் நுழைந்து முன்னாள் அமைச்சர் தயாசிரி ஜயசேகர பிணையில் எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகிய போதும் இதுவரை இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதோடு, இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக எந்த வித ஜனாதிபதி கமிஷன்களும் நியமிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here