ஈஸ்டர் தாக்குதல்: பூரணப்படுத்தப்படாத மேலும் 38 பைல்கள் திருப்பி ஒப்படைப்பு

0
0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான சந்தேக நபர்களின் மேலும் 38 கோப்புக்களை சட்டமாஅதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த வகையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களின் 78 பைல்கள் பூரணமில்லை என்ற காரணத்தினால் இதுவரை சட்டமா அதிபரினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என சட்டமாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரசாங்க சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சரியான விசாரணையை மேற்கொண்டு விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டமாஅதிபர் பதில் பொலிஸ் மா அதிபரை மீண்டும் வலியுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here