உள்ளுர் தொலைக்காட்சி சேவை பாஜக-இஸ்ரேலிய பிரச்சாரக் கருவியாக மாறுகிறதா?

0
1

லத்தீப் பாரூக்

இலங்கையின் தொலைக்காட்சிச் சனல்களை வழங்கும் நிறுவனமொன்று இந்தியாவின் பாஜக அரசாங்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் ஒரு பிரச்சார கருவியாக மாறுகிறதா? பாஜக சார்பு அரசாங்கம் மற்றும் சியோனிச சார்பு கொள்கைகளை அடிப்படையாக வைத்து  இப்போது கேட்கப்படும் கேள்வி இது.

எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 2019 இல் சர்ச்சைக்குரிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு மற்றும் கொலைகளை அடுத்து இந்தச் சனல் வழங்கும் நிறுவனம், டாக்டர் ஜாகிர் நாயக்கின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பீஸ் டீவியை தடை செய்தது. இன்றுவரை இந்த தடை நடைமுறையில் உள்ளது. குஜராத்தி முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மோடி, டாக்டர் ஜாகிர் நாயக் முன்வைக்கும் அறிவுசார் சவால்களை எதிர்கொள்ள முடியாததால் அவர்களை துன்புறுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதே வழியில் இந்தச் சனல் வழங்கும் நிறுவனம் இப்போது இந்திய தொலைக்காட்சி சேனலான NDTV ஐ நீக்கியுள்ளது.  இது சர்ச்சைக்குரிய புதிய குடியுரிமைச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தும் மோடி அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் நடந்து வரும் எழுச்சி பற்றிய சிறந்த சீரான தகவலை வழங்கி வந்தது.  எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கின்ற, பாஜக அரசாங்கத்தின் பிரச்சார சேனலான, மோடியின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான எழுச்சியை மில்லியன் கணக்கானவர்களுக்கு இருட்டடிப்புச் செய்கின்ற டைம்ஸ் நவ் என்ற சனல் என்.டி.டி.விக்கு பதிலீடு செய்யப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சில இந்து பண்டிதர்களை வெளியேற்றுவது குறித்த இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டசிறப்பு நிகழ்ச்சியொன்றை திங்களன்று (ஜன.20) டைம்ஸ் நவ் ஒளிபரப்பியது.

கார்டினல் மால்கம் ரன்ஜித் மற்றும் முன்னாள் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பலரும் சுட்டிக் காட்டியதன்படி, ஈஸ்டர் ஞாயிறு சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத முஸ்லிம் சமூகத்தை தண்டிப்பதற்காகவே பீஸ் டீவி தடை விதிக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில்,டாக்டர் ஜாகிர் நாயக் பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் மீதான ஒடுக்குமுறைக்கு ஆதரவளித்தால் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் ஆளும் பாஜக அரசாங்கம் அவருக்கு எதிரான பண மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட முன்வந்ததாக பல தகவல்கள் வந்தன. இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கு மேலதிகமாக, நாயக்கிற்கு அவரது சொத்துக்களை மீள வழங்கவும் நாடு திரும்புவதற்கான அனுமதி வழங்கவும் விலைபேசப்பட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்துள்ள நாயக், அவரை மௌனமாக்கும் பாஜக அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறி இவற்றையெல்லாம் மறுத்துள்ளார்.

நாயக்கை ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, இந்தியா அவர் மீது நியாயமான விசாரணை நடத்தாது என பிரதம மந்திரி கலாநிதி மகாதிர் முகமத் கூறிவருவதனால், மலேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து எதிர்ப்புக்களைத் தூண்டியகாஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் ஒடுக்குமுறையையும், புதிய குடியுரிமைச் சட்டத்தையும் மகாதீர் பகிரங்கமாகவே விமர்சித்தார். டாக்டர் ஜாகிர் நாயக்கின் பீஸ் டீவி மத  ஒப்பீட்டு தொடர்பிலான மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனலாகும். டாக்டர் நாயக் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் குழு ஒருபோதும் வன்முறையையோ வெறுப்பையோ ஊக்குவிக்கவில்லை.  அதற்கு மாற்றமாக அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை மட்டுமே ஊக்குவித்தது. இதுபோன்ற அறிவுபூர்வமாக தொலைக்காட்சி சேனலை ஏன் இந்தச் சனல் வழங்கும் நிறுவனம் தடை செய்தது என்பதே கேள்வி.

1965அக்டோபர் 18 இல் பிறந்த ஜாகிர் நாயக் ஒரு இந்திய இஸ்லாமிய அறிஞர். தொழில் ரீதியாக அவர்  ஒரு மருத்துவர். இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஐஆர்எஃப்) நிறுவனர் மற்றும் தலைவரான அஹ்மத் டீடாட்டின் செல்வாக்கு பெற்று நாயக் இஸ்லாமிய போதகராக மாறினார்.  

இஸ்லாமியம் மற்றும் அதன் கொள்கைகளை முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்காக டாக்டர் நாயக் “பீஸ் டீவி” என்ற மதத் தொலைக்காட்சி சேனலை சொந்தமாக நிறுவி வைத்திருக்கிறார். துபாயில் இருந்து இயங்கும் பீஸ் டீவி  உலகம் முழுவதும் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயக் தனது சேனலைப் பயன்படுத்தி இந்து மற்றும் கிறிஸ்தவ தலைவர்களுடன் சுமுகமான விவாதங்களையும், பிரபலமான விரிவுரைகளையும் வழங்குகிறார்.

2012 ல் இந்திய அரசு சேனலுக்கு தடை விதித்தது. பீஸ் டீவிக்கு மேலதிகமாக, நாயக் தனது பணிக்கான ஒரு கருவியாக சோஷியல் மீடியாவையும் பயன்படுத்துகிறார். தற்போது, ​​பேஸ்புக்கில் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாயக்கைப் பின்தொடர்கின்றனர். 2014 ஆம் ஆண்டில், அவர் இஸ்லாமிய ஸ்மார்ட்போனான பீஸ் மொபைலை அறிமுகப்படுத்தினார்.  இது “உலகின் ஒரே நம்பகமான இஸ்லாமிய அண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்” என்று அறியப்பட்டது. முன்பே நிறுவப்பட்ட 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பயன்பாடுகளும் (APPS), நாயக்கின் சுமார் 80 மணிநேர விரிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகளுடன் இந்த தொலைபேசி வெளிவந்தது.

 பாராட்டுக்களும் விமர்சனங்களும்

நாயக்கின் சூடேற்றும் மற்றும் சர்ச்சைக்குரிய பார்வைகளும் போதனைகளும் அவருக்கு பாராட்டுக்களையும் கடுமையான விமர்சனங்களையும் கொண்டு வந்துள்ளன. 2013 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமினாலும், மலேசியாவின் சுல்தான் கெடாவின் அப்துல் ஹலீம் ஆகியோரினாலும் பாராட்டப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்-அஸீஸ் அல்-சவூத் இவருக்கு மன்னர் பைசல் சர்வதேச விருது வழங்கி கெளரவித்தார்.

இப்போது அவர்கள் என்னிடம் ஒரு கேள்வியும் கேட்காமல் என்னைத் தடைசெய்துள்ளதால், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்றி, சட்ட ரீதியாக மட்டுமே பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரல் தெளிவானது.  எப்படியாவது என்னைச் சிக்க வைக்கத் தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள். நான் அதற்கெதிராகப் போராடுவேன் என டாக்டர் ஸாகிர் நாயக்  கூறுகிறார்.

பீஸ்டீவி மீதான தடை இன்றுவரை நடைமுறையில் இருக்கும்போது, ​​ இந்தச் சனல் வழங்கும் நிறுவனம் ஒரு தீவிரமான இஸ்ரேலிய சார்பு பிரச்சார சேனலை “God Bless Israel” என்ற பெயரில் சேனல் 94 இல் அறிமுகப்படுத்தியது. இது இஸ்ரேல் எந்த அளவிற்கு தீவின் ஊடகங்களில் ஊடுருவ முடிந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. இருப்பினும் இந்த சேனல் தற்போது அகற்றப்பட்டது. இப்போது யூத மதத்தைப் பற்றி Jewish Voice.com என்ற புதிய சேனலை 97 இல் ஆரம்பித்திருக்கிறது.

யூத மதத்தைப் பற்றிய ஒரு சேனலை யாரும் எதிர்க்கப் போவதில்லை. வெளிப்படுத்தப்பட்ட மதங்களில் ஒன்றான இதனை இறைதூதர் ஈசா, இயேசுவைப் போலவே உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மதிக்கிறார்கள், இருப்பினும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மறைப்பதற்கு இஸ்ரேல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவினதும், தங்கள் பிழைப்புக்காக  கண்மூடித்தனமாக ஆதரவளிக்கும் அரபு கொடுங்கோலர்களதும் முழுமையான ஆதரவுடன் இந்த சேனல்களைப் பயன்படுத்துகிறது.  ,

இஸ்ரேலின் முக்கிய இலக்கு இஸ்லாமும் உலகளாவிய முஸ்லிம்களும். அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களின் முதல் முன்னுரிமை கூலிப்படையினரின் ஒரு குழுவை அமைத்து, முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தவும், வன்முறையை கட்டவிழ்த்து விடவும், சமூகங்களை பிளவுபடுத்தவும் பயன்படுத்துவதாகும்.

இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இஸ்ரேலின் குற்றப் பின்னணி பற்றி அதிகம் தெரியாது, ஏனெனில் அதன் கொடுமைகள் உள்ளூர் ஊடகங்களில் ஒருபோதும் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. இவை பொதுவாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு அவர்களின் சொந்த நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்தும் கருவியாக மாறியுள்ளன.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலியர்கள் இங்கு ஊடுருவத் தொடங்கியபோது இது இங்கே நடக்கும் என்று நான் கணித்து வெளியிட்டேன். இப்போது அது நடந்து விட்டது. முஸ்லிம்கள் அரக்கர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். சமூகங்கள் பிளவுபட்டுள்ளன. அவர்களின் அதிகரித்த பிரசன்னம் வரவிருக்கும் தீங்குகளை கட்டியம் கூறுகின்றன. இது ஒட்டுமொத்தமாக தீவுக்குமான தீங்காகவே அமையப் போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here