எகிப்தில் இணையத்தளங்களை முடக்குவதற்கு புதிய சட்டம்

0
0

எகிப்தில் இணையத் தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்றில் அப்துல் பத்தாஹ் அல் ஸீஸி கையெழுத்திட்டுள்ளார்.

தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க இச்சட்டம் வழிவகை செய்யும்.

நேற்று(19) நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்த சட்ட மசோதா நிறைவேறியது.

இந்த சட்டத்தின்படி இணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள புதிய சட்டம் உதவும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திர சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும் நசுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here