எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம், தயார் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

0
0

சந்திப்பு – இன்ஸாப் ஸலாஹுதீன்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஒரு ‘ஹீரோ‘ என அழைக்கப்பட்டார். அது ஏன் என நினைக்கிறீர்கள்?
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 17 மற்றும் 18 ஆம் திருத்தம் ஆகியவற்றினால் முன் வைக்கப்பட்ட எந்தவிதமான சுயா தீன ஆணைக் குழுவும் நிறுவப்படாத நிலையில் வழமை போல பழைய தேர்தல் திணைக்களமே இயங்கி வருகின்றது. ஆயினும் அவ்விரண்டு சட்டங்களிலும் இருக்கின்ற ஒரு உறுப்புரை “சுயாதீன தேர்தல் ஆணைக் குழு நிறுவப்படும் வரை பதவியிலுள்ள தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல்கள் திணைக்களத்திற்கும் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கும் உரிய கடமைகளையும் தத்துவங்களையும் தொடர்ந்தும் ஆற்றி வர வேண்டும்“ எனக் கூறுகிறது.
இதன் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக் குழு நிறுவப்படாத போதிலும் கூட ஆணைக் குழுவின் கடமைகளையும் தத்துவங்களையும் ஆற்றும் பொறுப்பு தேர்தல்கள் திணைக்களத்திற்கு அல்லது தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு சுமத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் தற்போதிருக்கின்ற தேர்தல்கள் ஆணையாளர் கடந்த பல தேர்தல்களின் போது அக்கடைமைகளையும் தத்துவங்களையும் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கூடிய அக்கறை எடுத்தார்.
இதற்காக சில வேளைகளில் சட்ட விதிகளைக் கூட போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைக் கட்சிகளின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடி இயற்ற வேண்டிய நிலை கூட ஏற்பட்டது. ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களில் சில சரியாக நடைமுறைப் படுத்தப்படாமையினால் முக்கிய மாகதேர்தல் காலத்திலே முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் ஏற்கெனவே பொலிஸ் திணைக் களத்திற்கு அல்லது அலுவலகங்களுக்கு மாத்திரம் முன்வைக்கப்படு வதை விடுத்து தேர்தல்கள் திணைக்களத்தினால் முறையாக நிறுவப்பட்ட முறைப்பாட்டுக் கையேற்பு மையங்களுக்கு முன்வைக்கப்படு வதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்தார்.
தேர்தல் திணைக்களத்தில் இயங்கி வந்த முறைப்பாட்டு கையேற்பு மத்திய நிலையம், இதற்கு மேலதிகமாக மாவட்ட ரீதியான, இனங் காணப்பட்ட பிரதேசங்களிலும் நிறுவப்பட்டிருந்ததுடன் முறைப் பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தீர்மானங்களையும் அவர் எடுத்தார். உள்ள அதிகாரத்தை அவர் சரியாகப் பயன்படுத்தினார். இதுதான் அதன் பின்னால் உள்ள வெற்றி.
நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மற்றும் அதில் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் பற்றி விளக்குவீர்களா?
இலங்கை வரலாற்றிலே இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இரண்டு வகையான தேர்தல் முறைகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஆரம்பித்து 1977 ஆம் ஆண்டின் பாராளு மன்றத் தேர்தல் வரையிலான 30 ஆண்டு காலப்பகுதிகளில் நடை பெற்ற தேர்தல்கள் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அல்லது ஊகக (The Fisrt pass the post system) முறை என்றழைக்கப்படுகின்றது.
இலங்கை 160 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் சில தொகுதிகள் பல் அங்கத்தவர் தொகுதியாக் கப்பட்டு இறுதியாகக் காணப்பட்ட முறைப்படி 168 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்ற ஒரு நடைமுறை காணப்பட்டது. 77 ஆம் ஆண்டுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 2 ஆவது அரசியலமைப்பின் படி இலங்கையில் விகிதாசாரப் பிரதிநி தித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை யில் தொகுதிவாரிப் பிரதிநிதித்து முறை நீக்கப்பட்டதோடு மாவட்ட மட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்கின்ற, நடைமுறையில் உள்ள முறை கொண்டுவரப்பட்டது.
தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையில் உள்ள குறைகளே விகி தாசாரத்தை நோக்கி நகர்வதற்கான காரணமாக சுட்டிக் காட்டப்பட் டது. காலப்போக்கில் விகிதாசார முறையிலும் பல குறைபாடுகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே இதிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற கருத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உச்ச நிலையை அடைந்தது. இந் நிலையில் இரண்டு முறைகளையும் கலந்த ஒரு புதிய முறை பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட இருக்கின்றது.
இப்புதிய முறையினால் சிறு பான்மைக் கட்சிகள் பாதிப்பை எதிர் நோக்குமா?
இன்னும் இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இருப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய திருத்தங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும் எல்லை மீள் நிர்ணய நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம். ஆனால் புதிய தேர்தல் முறை எப்படி வரப் போகின்றது என்பது பற்றிய விளக்கம் பாராளுமன்றத் தில் அது சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தெரிய வரும்.
வாக்காளர் பதிவு பற்றிய அடிப்படைத் தெளிவுகளை வழங்க முடியுமா?
இலங்கையில் வாக்குரிமை என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது.இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் முதல் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொள்கிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வீடு வீடாகச் சென்று விண் ணப்பங்களை கையளித்து தகவல் களைத் திரட்டும் பணிமே மாதம் 15 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்காளர் அனைத்துத் தகைமைகளையும் கொண்டிருந்தாலும் வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாவிட்டால் அவரால் வாக்களிக்க முடியாது. எமது வாக்காளர்களிடம் இருக்கின்ற ஒரு குறைபாடுதான் தேர்தல் காலங்களில் வாக்காளர் அட்டை வீட்டிற்கு வராவிட்டால் தான் அது குறித்துத் தேடுவார்கள்.
தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்படுகின்ற பெயர்களை ‘அ‘ இடாப்பு என்றும் புதிதாக பெயர் சேர்க் கப்படுகின்ற பட்டியல் ‘ஆ‘ இடாப்பு என்றும் இரண்டு இடாப்புக்கள் தயார் செய்யப்பட்டு இந்த இரண்டும் வலுவில் உள்ள இடாப்போடு பல இடங்களிலே ஒரு மாத காலத்திற்கு பார்வைக்கு வைக்கப்படும். இது பெரும்பாலும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவதுண்டு.
பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளர் வாக்களிக்கச் செல்லாமல் இருந்தால் அவருக்கெதிராக நட வடிக்கை மேற்கொள்ள இலங்கையில் சட்டம் இல்லை.ஆனால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாக்களிக்காவிட்டால் தண்டப் பணம் செலுத்த வேண்டிய நடைமுறை இருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தல் எப் போது நடைபெறும் என்பது குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் இருக்கின்றன. இது தொடர்பில் உங்கள் அபிப்பிராயம்…
நடைபெற உள்ள தேர்தல்களைப் பற்றி தேர்தல்கள் திணைக்களத்திற்கு யூகம் தெரிவிக்க முடியாது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுர் அதிகார சபைத் தேர்தல்கள் 3 கட்டங்களாக நடைபெற்றது உங்களுக்குத் தெரியும். உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் ஆனால் இதனை இன்னும் ஒரு வருடத்தால் நீடிக்கச் செய்வ தற்கு சட்டத்தினூடாக உள்ளுர் ஆட்சி அமைச்சருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 18 ஆம் திருத்தத்தின் படி பாராளுமன்றத்திற்கு 1 வருடம் பூர்த்தியான பின் அதனைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. ஆனால் அது 19 ஆவது திருத்தத்தின் மூலம் நான் கரை ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பாராளுமன்றம் 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் எப்போது வேண்டு மானாலும் கலைக்கப்படலாம்.
நாட்டில் இருக்கின்ற 337 உள்ளுராட்சி அதிகார சபைகளில் 335 சபைகளுக்கான தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. முதலாவது கட்டம் 2011-03.17, இரண்டாவது கட்டம் 2011.07.23, மூன்றாவது கட்டம் 2011.10.08 ஆம் திகதியும் நடைபெற்றுள்ளன. இவற்றின் பதவிக்காலங்கள் வெவ்வேறு காலங்களில்தான் நிறைவடைய இருக்கின்றன. எனவே இவை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்குமா வெவ்வேறாகத் தேர்தல் நடக்குமா என்று எங்களால் கூற முடியாது. எனவே எப்போதும் தேர்தல் நடக்கலாம். அப்படி நடந்தால் அதனை நடாத்துவதற்கான தயார் நிலையில் தேர்தல்கள் திணைக்களம் இருக்கிறது.
எமது சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக நீங்கள் காணும் விடயங்கள்…
இஸ்லாத்தின் மீதும் அதன் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளவன் என்ற வகையில் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முஸ்லிம் சமூகத்திலே தஃவாப் பணிக்காகவும் சமய ரீதியான ஏனைய விடயங்களுக்காகவும் செலவிடுகின்ற தொகையை விட குறைவான தொகையே சமூகத்தின் கல்வி நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படுகிறது.
அதே நேரம் தஃவாக்களத்தில் கருத்து வேறுபாடுகளும் அபிப்பிராய பேதங்களும் தலை தூக்கி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்ற நிலையும் காணப்படுகிறது. பள்ளிவாயலுக்கு ஒரு மத்ரஸா என்ற நிலை இன்று உருவாகி வருகின்றது. எனவே கல்வி பெற வேண்டிய மாணவர்களில் பலர் மார்க்க கல்வியை மாத்திரம் பெற ஈடுபடுத்தப்பட்டு அவர்களது நேரங்கள் முழுமையாக அங்கு கழிகின்றன. எனவே இவ் விடயங்களில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இது குறித்து நாம் அனை வரும் ஒற்றுமையாக ஆராய்ந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here