எப்.பி.ஐ. தலைவரைப் பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

0
0
அமெரிக்க உள்துறை உளவு நிறுவனமான எப்.பி.ஐ. இன் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமேயை பதவி நீக்கம் செய்தமை மேற்குலக வட்டாரங்களில் அதிர்ச்சியலைகளைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்க உள்துறை உளவு அமைப்பான எப்.பி.ஐ. கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் கொடுக்கல் வாங்கல்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்ததோடு ரஷ்யா அமெரிக்க அதிபர் தேர்வில் தலையிடுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தது.
மைக்கல் கோமேயால் திறம்பட எப்.பி.ஐ. நிர்வாகத்தை கையாள முடியவில்லை, எனவே நீதித் துறைப் பணிப்புரைக்கமைய அவர் பதவி நீக்கப்படுவதாக ட்ரம்ப் தரப்பு அறிவித்துள்ளது. அதே வேளை ட்ரம்பினது தேர்தல் பிரசாரக் குழுவின் ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து எப்.பி.ஐ. விசாரணைகள் ஆரம்பித்த பின்பு அதற்கெதிராகவே குறித்தவாறு பதவிநீக்கம் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here