ஐ.நா. எச்சரிக்கைகளையும் மீறி அணுவாயுத ஏவுகணை பரிசோதனை

0
1

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அனைத்து எச்சரிக்கைகளையும் மீறி, தன் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளையும் பொருட்டாகக் கொள்ளாமல், வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

அணுவாயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் உள்ள போலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனையை மீளவும் நடத்தப் போவதாக கிம் ஜொன் யுன் தெரிவித்துள்ளார். இத்தகைய பரிசோதனை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சர்வதேச நியமங்களை அப்பட்டமாக மீறும் செயல் என தென்கொரியா மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளன.

வடகொரியாவின் ஆயுதப் பரிசோதனைகளுக்கு சீனா ஆதரவளித்து வருகின்றது. இந்நிலையில், வடகொரியா தொடர்பில் சீனா-அமெரிக்கா என்பவற்றுக்கிடையில் ஒரு பனிப்போர் நடந்து வருகின்றது. முன்னைய பனிப்போர் காலத்திலேயே கொரியா, வடகொரியா தென்கொரியா என அமெரிக்காவினாலும் ரஷ்யாவினாலும் பிளவுபடுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here