ஒக்.04 முதல் உம்ராவுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு

0
4

கொரோனா காரணமாக உம்ராவுக்கு விதி்க்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்துவதற்கு சவூதி அரேபியா முன்வந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதிலான முன்னேற்றத்தையும் உலக முஸ்லிம்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவூதியின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வகையில் முதல் கட்டமாக சவூதி பிரஜைகளுக்கும் சவூதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்குமாக ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் உம்ரா செய்வதற்கு அனுமதிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 6000 பேர் இதற்கென அனுமதிக்கப்படவுள்ளனர். இது வழமையான உ்ம்ரா யாத்திரிகர்களின் 30 வீதமாகும்.

ஒக்டோபர் 18 இல் ஆரம்பமாகும் இரண்டாம் கட்டத்தின் போது 75 வீதமானவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் 15,000 முதல் 45,000 பேர் வரை அடங்குவர். மூன்றாவது கட்டத்தில் 20,000 முதல் 60,000 பேர் வரை அனுமதிக்கப்படுவர். இதில் வெளிநாட்டவர்களும் உம்ரா செய்ய முடியும். வெளிநாட்டவர்களுக்கான உம்ரா அனுமதி நவம்பர் 01 முதல் ஆரம்பமாகிறது. கொரோனா அபாயம் முற்றாக நீங்கியதன் பின்னர் நான்காவது கட்டமாக உம்ரா ஏற்பாடுகள் வழமைக்குத் திரும்பவுள்ளன.

உம்ரா செய்ய விரும்புபவர்கள் இஃதமர்னா (I’tamarna) என்னும் செயலி ஊடாக தமது விண்ணப்பங்களையும் தகவல்களையும் வழங்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். இந்தச் செயலி ஹஜ், உம்ரா அமைச்சினால் தயாரிக்க்ப்பட்டு வருகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here