ஒவ்வொரு கிராமத்துக்கும 20 இலட்சம் 31 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்

0
0

ஒவ்வொரு கிராமத்தினதும் அபிவிருத்திக்கென 28 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் 14,021 கிராம சேவையாளர் பிரிவுகளிலுமுள்ள ஒவ்வொரு கிராமத்தினதும் உட்கட்டமைப்பு வசதிக்கென 2 மில்லியன் ரூபா புதிய வருடத்தில் ஒதுக்கப்படவுள்ளது. பிரதமரின் சுபிரி கமக் என்ற இந்த வேலைத் திட்டத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்தத் திட்டம் இளைஞர்களினதும் பெண்களினதும் சுய தொழில் மற்றும் தொழிற்துறைகளை இலக்காகக் கொண்டமையும். 9 வகையாக வகுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திலிருந்து கிராமத்துக்குப் பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ள முடியும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. வீதிகள், பாலங்கள், வடிகான்கள் அமைத்தல், நெற்களஞ்சியங்களை திருத்தியமைத்தல், வாராந்த சந்தைகள், சிறுகடைகள் என்பன முன்னுரிமைப் பட்டியலில் அடங்குகின்றன. அணைக்கட்டுகள் நிர்மாணித்தல், குளங்கள் மற்றும் கிணறுகளை அபிவிருத்தி செய்தல் என்பவற்றையும் தெரிவு செய்ய முடியும். குடிநீர், சுகாதார நிலையங்கள், பாடசாலை அபிவிருத்திகள் போன்றவையும் தெரிவுக்குள் அடங்குகின்றன. தெரிவு செய்யும் ஒவ்வொரு திட்டத்துக்கும் 500,000 முதல் 20 இலட்சம் ரூபா வரை வழங்கப்படவுள்ளன.

உள்ளுர் அரசியல்வாதிகளையும் இணைத்ததான கிராமியக் குழுவொன்று இந்தத் திட்டங்களைத் தீர்மானிப்பதற்காகத் தெரிவு செய்யப்படும். எல்லா அரசாங்க உத்தியோகத்தர்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவர். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்தக் குழுவுக்கான ஒருங்கிணைப்பாளராகத் தொழிற்படுவர் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகாரத்துக்காக பிரதேச செயளாளர் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இதேவேளை பிரதமரின் வழிகாட்டலின் கீழ், கிராமத்துக்கொரு வீடு திட்டமும் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த வகையில் 14,021 கிராம சேவகர் பிரிவிலும் ஒவ்வொரு வீடு 2020 ஆம் ஆண்டுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here