கடன் அட்டையை வரையறைகளுடன் பயன்படுத்தல்

0
2

சமகால பிக்ஹ் பிரச்சினைகள்

கடன் அட்டையில் வட்டியை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தம் நடைபெறுகின்றபோதும் வட்டியுடன் நேரடியாக சம்பந்தப்படாத பட்சத்தில் இக்கடன் அட்டையைப் பாவிக்கலாமா என்பதில் நவீன கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதாவது வட்டி கடமையாகாத வகையில் வழங்கப்பட்ட கால வரையறைக்குள் முழுத் தொகையையும் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் கடனட்டைகளைப் பயன்படுத்தலாமா என்பதே கருத்து வேறுபாட்டிற்குரிய கேள்வியாகும்.

வட்டியில் சிக்காத வண்ணம் கடன் அட்டையைப் பயன்படுத்துவது கூடும் என்று ஒரு சாராரும், கடன் அட்டை ஒப்பந்தம் வட்டியை அடிப்படையாகக் கொண்டே கைச்சாத்திடப்படுவதனால் அதன் முழு வடிவமும் ஹராமாகவே அமையும் என மற்றொரு சாராரும் கருதுகின்றனர்.

ஹனபி, ஹன்பலி மத்ஹபின் கருத்துக்களை நோக்கும்போது, அவர்கள் மேற்குறித்த நிலையில் அது ஆகும் என்று கருதுகின்றனர். ஒரு கடன் உடன்படிக்கையின்போது மார்க்கம் அனுமதிக்காத ஒரு நிபந்தனையும் அங்கு விதிக்கப்படுமாயின், அந்த நிபந்தனை செல்லுபடியற்றதாக மாறுமே தவிர உடன்படிக்கையில் அது எவ்வித பாதிப்பையும் செலுத்த முடியாது என்பதே இவர்களின் வாதமாகும்.

எனவே, கடன் அட்டை தொடர்பில் வட்டியைக் கொண்டு விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் செல்லுபடியற்றது. அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அதேபோன்று அது போன்ற நிபந்தனையில் நாம் விழுந்து விடாமல் கடன் அட்டைகளைப் பாவிக்க முடியும் எனக் கூறும் இவர்கள், கீழ்வரும் ஹதீஸை அதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

“மக்களுக்கு என்ன ஆயிற்று. அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே. அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லுபடியாகாது. அதை அவர் நூறு முறை நிபந்தனையாக விதித்தாலும் சரியே. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி), ஸஹீஹுல் புகாரி 2530)

மேற்குறித்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சமகால அறிஞர்கள், ஒருவர் ஒப்பந்தத்தின்படி வட்டியுடன் நேரடியாக சம்பந்தப்படாது குறிப்பிட்ட கால வரையறைக்குள் குறிப்பிட்ட கடனை செலுத்தி விட முடியும் என்ற மன உறுதியுடனும் பேணுதலுடனும் இருப்பின், வெறுமனே ஒப்பந்தத்தில் மட்டும் கைச்சாத்திடுவதிலும் அவ்வட்டையைப் பயன்படுத்தி ஏனைய ஆகுமான சேவைகளைப் பெற்றுக்கொள்வதிலும் தவறில்லை எனக் கருதுகின்றனர். இதற்கு மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

“நான் பரீராவை வாங்கினேன். அப்போது எஜமானர்கள் அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டார்கள். நான் அதை நபியவர்களிடம் சொன்னேன். அதற்கு நபியவர்கள் அவனை விடுதலை செய்துவிடுங்கள். ஏனெனில், வாரிசுரிமை விலையைக் கொடுப்பவருக்கே. அதாவது, விடுதலை செய்பவருக்கே உரியதாகும் எனக் கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி), ஸஹீஹுல் புஹாரி 2023)

மற்றொர் அறிவிப்பின்படி, “நிபந்தனையிடுங்கள் விடுதலை செய்யுங்கள். மேலும் அவர்களுக்கே வாரிசுரிமை எனவும் நிபந்தனையிட்டுக் கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புஹாரி 2524)

மேற்போந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் முஹத்திஸூன்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.

“மார்க்கத்திற்கு முரணான இத்தகைய நிபந்தனைகளை இட்டுக் கொள்வதை தரக் குறைவாகக் காட்டுவதற்கும் அவ்வாறான நிபந்தனைகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்பதையும் ஷரீஆவுக்கு முரணாக எத்தகைய நிபந்தனைகளை இட்டபோதும் அது செல்லுபடியாகாது என்பதையும் காட்டவே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

மின்சார, தொலைபேசிக் கட்டணம் உரிய நேரத்தில் செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலதிகமான ஒரு தொகையும் சேர்த்தே அறவிடப்படுவது பல நாடுகளில் நடைமுறையிலுள்ள சட்டமாகும். இங்கு வட்டி சம்பந்தப்படுவதால் ஒரு முஸ்லிம் மின்சாரம், தொலைபேசி, குடிநீர் என்பவற்றைப் பாவிப்பது ஹராம் என எங்களால் கூற முடியுமா? இல்லை. மாறாக, வட்டியில் விழுந்து விடாமல் குறிப்பிட்ட கால வரையறைக்குள் கட்டணத்தைச் செலுத்தி விட முடியும் என மன உறுதியும் நம்பிக்கையும் இருப்பின் அவற்றைப் பயன்படுத்த முடியும். கடன் அட்டை விவகாரத்தையும் இவ்வாறே நோக்க வேண்டும். தக்கி உஸ்மான், வஹ்பதுஸ் ஸுஹைலி, அபூ குத்தா போன்றோர் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.

கடன் எந்தவொரு இலாபத்தினையும் பெற்றுத் தருவதனை அடிப்படையாகக் கொண்டிருத்தல் ஆகாது. இது மாலிக் மத்ஹபின் உறுதியான நிலைப்பாடா கும். “அளவிலோ பண்பிலோ கூடுதலாக அல்லது சிறந்ததாக திருப்பித் தர வேண் டும் என்ற நிபந்தனையின் கீழ் கடன் வழங்கப்படின், மொத்த உடன்படிக்கை யுமே செல்லுபடியற்றதாக மாறிவிடும். கடன் எடுத்தவரிடமிருந்து கடன் கொடு த்தவர் கடனுக்குப் பிரதியீடாக மேலதிக மாக ஒரு தொகையையோ பொரு ளையோ பெற்றிருப்பின் அதனைக்  கடன் எடுத்தவரிடமே திருப்பி ஒப்ப டைப்பது வாஜிபாக மாறிவிடுகின்றது.

இலாபத்தை நிபந்தனையாக வைத்து வழங்கப்படுகின்ற எந்தவொரு கடன் கொடுக்கல் வாங்கலும் செல்லுபடி யற்றதாகவே அமையும். இக்கருத்தில் ஷாபி மத்ஹபினரும் மாலிக் மத்ஹ பினரும் கருத்தொருமைப்படுகின்றனர்.

கடன் அட்டையில் இலாபத்தை அல்லது வட்டியை நிபந்தனையாக வைத்தே கடன் வழங்கப்படுவதனால் முழு உடன்படிக்கையுமே செல்லுபடி யற்றதாகவே கருதப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவதும் ஹராமான தாகவே அமையும் என இத்தரப்பினர் வாதாடுகின்றனர்.

இக்கருத்துக்கு மாற்றமாக பரீராவு டைய சம்பவத்தை ஆதாரமாகக் காட்டு வது பொருத்தமற்றது என இவர்கள் கருதுகின்றனர். ஏனெனில், பரீராவுடைய சம்பவத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனை உண்மையில் ஷரீஆவுக்கு முரணானது, செல்லுபடியற்றது. என்றாலும் அங்கு அந்நிபந்தனையை செல்லுபடியற்றதாக ஆக்கக் கூடிய உரிமையும் அதிகாரமும் கடன் வாங்குபவருக்கு இருந்தது.

கடன் அட்டையைப் பொறுத்தவரை ஷரீஆவுக்கு முரணான வட்டியை அடிப் படையாகக் கொண்ட நிபந்தனை அங்கு காணப்பட்ட போதிலும் அதனை செல்லுபடியற்றதாக ஆக்கக் கூடிய உரிமை அட்டை உரிமையாளரிடம் இல்லை. குறிப்பிட்ட கால வரையறைக்குள் கடன் தொகையை செலுத்தத் தவறும் பட்சத் தில் விரும்பியோ விரும்பாமலோ வட்டி யுடன் சேர்த்தே அக்கடனை செலுத்து வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார். ஏனெ னில், அது ஷரீஆவின் பார்வையில் அனுமதிக்கப்படாவிட்டாலும் பொது வாக, நாட்டின் சட்ட ஒழுங்கின் அடிப் படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா கவே காணப்படுகின்றது.

எனவே, கடன் அட்டை தொடர்பில் காணப்படும் இந்த செல்லுபடியற்ற நிபந்தனை முழு உடன்படிக்கையையும் செல்லுபடியற்றதாகவே ஆக்கி விடுகின் றது என்பதே இவர்களின் வாதமாகும்.

கடன் அட்டைகள் மூலம் எதிர்பார்க் கப்படும் பாதுகாப்பு, இணைய வழி வியாபாரம் போன்ற அனுகூலங்களை இன்று பற்று அட்டை (ஈஞுஞடிt இச்ணூஞீ) மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். எனவே, கடன் அட்டையை நோக்கிச் செல்ல வேண்டிய தேவையோ நிர்ப் பந்தமோ இல்லை என்பதுதான் இவர் களின் நிலைப்பாடாகும்.

அல்குர்ஆன் வட்டியை அல்லாஹ் வுடன் போர் தொடுப்பதோடு ஒப்பிட்டு, கடுமையாக எச்சரித்துள்ளது. ஹதீஸ் களும் வட்டி குறித்து கடுமையாக எச்சரித்துள்ளன. அத்தகைய வட்டியுடன் சம்பந்தப்படுத்தியே கடன் அட்டை உடன்படிக்கை நிகழ்வதாலும், கடன் அட்டை ஆடம்பரமான, அனாவசிய மான செலவுகளை தூண்டக் கூடியதாக இருப்பதனாலும் எந்தவொரு வகை யிலும் வங்கிக்குக் கடன்பட்ட நிலையில் மரணிக்கக் கூடிய ஒரு நிலையை ஏற் படுத்தும் என்பதனாலும் இது தொடர் பில் பெரும்பாலான இஸ்லாமிய அறி ஞர்கள் கடுமையான நிலைப்பாட் டையே கொண்டுள்ளனர்.

ஷெய்க் முஸ்தபா அஹ்மத் ஸர்கா, ஷெய்க் அலி அஸ்ஸாலூஸி, ஷெய்க் ஸாலிஹ் உஸைமின், ஷெய்க் முஹம் மத் முக்தார் அஸ்ஸலாமி போன்றோர் இதனை ஆதரிக்கின்றனர். அத்தோடு விற்பனையாளர்கள் கடன் அட்டையைப் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர் களுக்குப் பொருட்களை விற்கும்போது பொருட்களது பெறுமானத்தின் ஒரு குறிப்பிட்ட வீதம் வங்கிக்கு செலுத்தப் பட வேண்டும். இது வட்டியாகக் கொள்ளப்பட மாட்டாது என்பது இந்த அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

எவ்வாறாயினும் நிர்ப்பந்தமான சூழ் நிலையில் கடன் அட்டைகளைப் பயன் படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது ஷரிஆ அது குறித்து கொண்டுள்ள நிலைபாபடு என்ன என் பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here