கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

0
1

கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்
கட்டாருக்கு எதிராக அறபு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா. மனித உரிமை நிறுவனம் விரைந்து செயல்பட வேண்டும் என கட்டார் வெளிவிவகார அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அறபு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இது குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அஸ்ஸானி கருத்து வெளியிடுகையில், “ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவையும் அதன் செயற்பாட்டு நிறுவனங்களையும் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட கட்டார் மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன். இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் வகைகூற வேண்டும்.”
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 37 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here