கம்பஹாவில் ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்

0
0

சுதேச மருத்துவக் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேதக் கல்லூரியை முழுமையான பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்துவதற்கு உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்புக்கான கற்கைநெறிகளை நடத்தி வருகிறது.

இதனுடன் சேர்த்து உயர்கல்வி தொடர்பில் அமைச்சர் முன்வைத்த மற்றும் சில முன்மொழிவுகளும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டன. வயம்ப பல்கலைக்கழகத்துக்கு தொழில்நுட்ப பீடமொன்றை நிர்மாணிப்பதற்கான 1560.36 மில்லியன் ரூபா ஒப்பந்தத்தை குருநாகலை சதுட்ட பில்டர்ஸுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு விடுதி, சிற்றுண்டிச்சாலை மற்றும் பட்டறைகளை உள்ளடக்கிய மூன்று கட்டடங்களை அமைப்பதற்கான 927.34 மில்லியன் ரூபாவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here