கற்றலும் தூக்கமும்

0
0

மாணவர் பருவத்தில் உள்ளவர்களின் பிரதான வேலை கற்பதாகும். பரீட்சைக்கு முன்னரும் சிறப்பாகக் கற்க வேண்டும். இரவில் குறைந்தது 6 மணி நேரம் ஏனும் மாணவர்கள் தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கினால் படிக்கும் வேளையில் தூக்கம் வராது. அவ்வாறு தூங்கி ஓய்வெடுத்தும் தூக்கம் ஏற்பட்டால் குறிப்பிட்ட மாணவனுக்கு கற்பதில் போதிய ஆர்வம் இல்லை என்பதே அர்த்தம்.

படித்து என்னவாக ஆகப் போகின்றோம் என்பதில் சரியான இலக்கு அவசியம். டெனிஸ் கோட்டில் கோட்டுக்கு வெளியே பந்தைப் பொறுக்கிப் போடுபவன் டெனிஸ் வீரனாக முடியாது. ஒரு நல்ல குறிக்கோள் இல்லாதவன் எங்கு சென்றாலும் நல்ல மாணவனாக இருக்க முடியாது. ஆர்வமும் தெளிவான இலக்கும் இருந்தால் நிச்சயமாக நான் படிப்பேன். எந்தத் தடையும் என்னை தடுத்து நிறுத்தி விட முடியாது. அது தூக்கமானாலும் சரியே என்று நினைத்துக் கற்பான்.

Tiredசில மாணவர்கள் மாலை வேளையில் அல்லது வைகறைப் பொழுதியில் கற்க ஆரம்பிக்கும்போதே தூக்கம் வருவதாக முறையிடுவர். அதனால் அவர்களது வீட்டுப் பயிற்சி செய்யப்படுவதோ பாடங்களை மீட்டுவதோ சாத்தியமில்லாது போகும். சில மாணவர்கள் பாடசாலை வகுப்புகளிலும் டியூஷன் வகுப்புகளிலும் தூங்கி வழிவார்கள்.

வயிற்றில் பூச்சி இருந்தாலும் நித்திரையோடு தலைவலியும் சேர்ந்து வரும். அத்தகைய சந்தர்ப்பங்களில் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவதோடு, பூச்சி மருந்தும் எடுப்பது நல்லது. தொடர்ச்சியாக பல மணித்தி யாலங்கள் ஒரே விடயத்தை உற்று நோக்கிக் கொண்டிருப்பதும் தூக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, கண்களைத் தளர்வடையச் செய்ய வேண்டும்.

அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை கண் தூர இடங்களைப் பார்க்க வேண்டும். கண் அண்மையிலுள்ள பொருட்களைப் பார்க்கும்போது கண் வில்லை குவிவு அதிகரிக்கலாம். கண் தசைநார்கள் அதனால் அதிகம் தொய்வடைகின்றன. இதன் மூலம் கண்கள் வலியை உணர்கின்றன. விளைவாக சிலருக்கு நித்திரை வெகு சீக்கிரமாக வருகின்றது. இடைக்கிடையே தூரவுள்ள இடங்களைப் பார்க்கும்போது கண் தசை நார்கள் தளர்வடைகின்றன. அதனால் வலி இல்லாமல் போய், நித்திரை அவசரமாக வருவது தவிர்க்கப்படுகின்றது.

இதேபோன்று வயிறு முட்ட உண்டுவிட்டு படிக்கும்போதும் தூக்கம் வரலாம். உள ரீதியான சோர்வு மற்றும் அதீத உடற் சோர்வு என்பனவும் தூக்கத்தைக் கொண்டு வரலாம். உடலில் இரும்புச் சத்து குறைவடைவதனால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் உற்சாகமின்மையும் தூக்க உணர்வும் அதிகரிக்கின்றது. ஆரம்ப நிலை மாணவர்கள் கற்றலில்  சோர்வடை வதற்கு இது முக்கிய காரணமாகும். இரவு வேளைகளில் போதுமானளவு தூங்கா விட்டாலும் தூக்கம் ஏற்படலாம். படிக்கும்போது தூக்கம் வந்தால் அதைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

ஒரே பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தால் அலுப்புத் தட்டும். எனவே, முக்கால் மணி நேரத்திற்கு ஒரு முறையாவது பாடத்தை மாற்றியமைப்பது ஒரு நல்ல பயிற்சியாகும்.

அவ்வாறு படிக்கும் போது ஓரளவு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் முன்வாசலிலோ தோட்டத்திலோ காலால் நடந்து செல்லலாம்.

கைத் தொலைபேசியிருந்தால் நண்பனுக்கோ உறவினர்களுக்கோ டயல் செய்து சிறிது பேசலாம்.

நீண்ட நேரம் படிப்பதுதான் ஆழமான கற்றல் என்று இல்லை. எந்தளவுக்கு கவனச் சிதறல் இன்றி மாணவர்கள் கற்கிறார்களோ அந்தளவுக்கு கற்றல் வினைத்திறனுள்ளதாக அமையும்.

முதலில் 15 நிமிடம் முழுக் கவனத்துடன் கற்பேன். பாடத்தில் குறிப்பிட்ட விடயங்களை அடுத்த 30 நிமிடங்களுக்குள் முடிப்பேன் என சங்கற்பம் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என கற்கும் நேரத்தை அதிகரித்துச் செல்லலாம். மனதையும் பாடங்களில் ஒருமுகப்படுத்தலாம். ஆரம்பத்தில் நேரத்தைப் பார்த்துக் கற்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பின்னர் கற்றல் பழக்கமாகும்போது. மணிக்கணக்காக இருந்து கற்கலாம்.

மாலை 7.00 – 9.00 மணியளவில் கற்கும் சில மாணவர்கள் படியுங்கள் என்ற கட்டளை வந்தவுடனேயே தமக்குத் தூக்கம் வருவதாக முறையீடு செய்வர். இது உண்மையான தூக்கம் அல்ல. இதனை உளவியலாளர்கள் போலித் தூக்கம் (forge sleep) என்பர். ஏனெனில், இது இயல்பாக ஏற்படக் கூடிய தூக்கம் அல்ல. மாறாக, உடலில் சில திடீர் இரசாயன மாற்றங்களால் நேர்வது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் நேரடியாக படுக்கைக்குச் செல்லாமல் படிப்பதை சற்றுத் தாமதித்து வேறு எதையேனும் செய்யலாம். பின்னர் தொடர்ந்து படிக்கலாம்.

உதாரணமாக போலித் தூக்கத்தைக் கலைப்பதற்கு குறிப்புப் புத்தகங்களை ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபடலாம். அல்லது ஒரு ஜோக்கைத் தேடி வாசிக்கலாம். கற்றலில் ஆர்வக் குறைபாடுள்ள மாணவர்களும் தமது வெறுப்பை போலித் தூக்கமாகக் காட்டுவர். இதற்குத் தகுந்த உளவள ஆலோசனை அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here