காடினல் ஜோர்ஜ் பெல்லுக்கு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு

0
1

வத்திக்கானின் அதிஉயர் பதவியிலுள்ள கார்டினல் ஜோர்ஜ் பெல் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸின் முக்கிய உதவியாளரும் ஆலோசகருமான இவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ளார்.

76 வயது நிரம்பிய இவர் வத்திக்கான் நிதித்துறையின் தலைவராகவும் கத்தோலிக்க திருச்சபையின் மூத்த அதிகாரியுமாக செயற்பட்டவர். மெல்போர்னில் இடம்பெற்ற ஒரு மாத கால பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் மொஜிஸ்திரேட் நீதிபதி பெலின்டாவின் தீர்மானம் பாராளுமன்றத்தில் கருத்திற் கொள்ளப்பட்டது. அதன்படி, ஜோர்ஜுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் போதுமானளவு ஆதாரங்கள் உள்ளதென்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போது வத்திக்கானிலுள்ள ஜோர்ஜ் பெல் விசாரணைகளை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா விரைந்துள்ளார். இவர் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. 2015 இல் இம்முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Image result for cardinal george pell

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here