காத்தான்குடி, ஏறாவுர், கல்குடா வைத்திய சாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் – ஷிப்லி

0
0
(சப்னி)
காத்தான்குடி, ஏறாவுர், கல்குடா தொகுதிகளில் காணப்படும் கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்திய சாலைகள் அதி நவீன வசதி வாய்ப்புடன் அபிவிருத்தி செய்யப்படும் என கிழக்கு மாகான சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 5ம் இலக்கத்தில் போட்டியிடும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தெரிவித்தார்.
நேற்று காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
தெடர்ந்து பேசுகையில் மட்டக்களப்பில் காணப்படும் போதனா வைத்தியசாலையும் அதி நவீன வசதிகளுடன் விசேடமாக அபிவிருத்தி செய்யப்படும்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய துறைக்கு தேர்ந்தேடுக்கப்படும் மணவர்கள் மற்றும் பல்கலை கழகத்துக்கு தேர்ந் தேடுக்கப்படும் அதி திறமை வாய்ந்த மாணவர்கள் அனைவக்கும் விசேட உக்குவிப்புத் தொகையும் வழங்கப்படும் என தெடர்ந்து அவர் தெரிவித்தார்.
ஆகவேதான் மட்டக்களப்பு மக்கள் அனைவரும் இணைந்து எமது சேவையின் சிகரம் ஷிப்லி பாறூக் அவர்களை பாராளுமன்றம் அனுப்ப வோண்டும் எனத் தீர்மானம் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here