காத்தான்குடி, ஸாஹிறா மாணவர்களுக்கு இலவசமாக பெருநாள் புத்தாடைகள்

0
0

கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் ஸாஹிறா விஷேட தேவையூடையோர் பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற விஷேட தேவையூடைய மாணவர்களுக்கு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இலவசமாக பெருநாள் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வூ 22-இன்று செவ்வாய்க்கிழமை ஸாஹிறா விஷேட தேவையூடையோர் பாடசாலையில் இடம்பெற்றது.
கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்இகாழி நீதிபதியூமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் ஸாஹிறா விஷேட தேவையூடையோர் பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற விஷேட தேவையூடைய 33 மாணவ இமாணவிகளுக்கு இலவசமாக பெருநாள் புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் முகாமையாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில்இ ஸாஹிறா விஷேட தேவையூடையோர் பாடசாலையின் அதிபர் ஏ.அன்வர் ஸாதிக் உட்பட பாடசாலை ஆசிரியர்கள்இ கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் நிருவாகிகள்இபெற்றௌர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விஷேட தேவையூடைய மாணவ இமாணவிகளுக்கு இலவசமாக பெருநாள் புத்தாடைகளை வழங்குவதற்கான அனுசரனையை அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.மும்தாஸ் (மதனி) வழங்கியதாக கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் செயலாளரும்இ ஊடகவியலாளருமான மௌலவி முஸ்தபா(பலாஹி) தெரிவித்தார்.
1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குறித்த விஷேட தேவையூடையோர் பாடசாலையில் சுமார் 33க்கும் மேற்பட்ட விஷேட தேவையூடைய மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
1-DSC07359 2-DSC07367 5-DSC07371 7-DSC07375 9-DSC07380 10-DSC07393 12-DSC07403

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here