காலிதா ஸியாவுக்கு பிணை

0
1

பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவர் பேகம் காலிதா ஸியாவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
பங்களாதேஷ் தேசிய கட்சியின் தலைவியான காலிதா ஸியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அது அரசியல் பலிவாங்கல் என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர் பிரதமராக இருந்த காலத்தில் 650,000 அமெரிக்க டொலர்களை ஊழல் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
காலிதா ஸியா அரசாங்கத்திற்கெதிராக பாரிய போராட்டமொன்றை நடாத்தவுள்ளார் என்ற சந்தேகத்தில் அரசாங்கம் அவரை கடந்த ஜனவரி மாதம் முதல் அவரது காரியாலயத்தில் காவலி்ல் வைத்திருந்தது.
பங்களாதேசஷ் அரசாங்கம் தனது எதிர்தரப்புகளை கடுமையாக கையாண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு அதன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்லாமிய வாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் ஷேய்க் ஹஸீனா மீது உள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here