காஷ்மீரில் மீண்டும் வன்முறைகள்

0
2

இந்திய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ள காஷ்மீரில் பொது மக்கள் சிலரை இந்திய இராணுவம் படுகொலை செய்ததை அடுத்து பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் என்று இராணுவம் கூறும் சாதாரண சிவில் சமூக பிரதியொருவர் கொல்லப்பட்டமைக்கு பல்லாயிரணக்கான மக்கள் தமது கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்தபோது, வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன.

காஷ்மீரின் வடக்குப் பிராந்தியத்தில் இந்திய இராணுவத்திற்கும் காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையில் வெடித்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 25 வயதான ஆஸிப் இக்பால் எனும் சாரதி வைத்தியசாலைக்கு நோயாளிகளை எடுத்துச் சென்றபோது இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலும் மறுக்கப்பட்டது.

தின்ட்புரா கிராமத்தில் மக்கள் பொலிஸாரை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியாளர்கள் என்று கூறி பொதுமக்களை இலக்கு வைப்பது இந்திய இராணுவத்தின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களின் ஆடுகளமாக இருந்து வருவதை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here