காஷ்மீர்: எரியும் நரகிலிருந்து ஒரு அபயக் குரல்!

0
0

 – உவைஸ் அஹமத் –

“காஷ்மீரில் ஒரு பழங்கதை உண்டு. இன்று காஷ்மீரின் பொதுமக்கள் சந்தித்துவரும் அவலத்தை அது தத்ரூபமாக சித்தரிகிறது.

முன்பொரு காலத்தில் மீனவன் ஒருவன் இருந்தான். மிக மோசமான பட்டினியும் துரதிர்ஷ்டமும் அவனைப் பிடித்து ஆட்டின. வாழ்வின் துரதிர்ஷ்டங்களையும் துன்பங்களையும் தாங்கும் சக்தியின்றி ஒருநாள் அவனுடைய தாய் இறந்து விட்டாள். வறுமையில் வாடிய அந்த மீனவன் தாயின் பிணத்தை புதைக்காமல், அதனை தின்று உயிர் பிழைக்கலாம் என்று தீர்மானித்தான். ‘இறைச்சி’ மணம் வருவதைக் கண்ட அவனுடைய அண்டை அயலார்கள், அவன் பொறித்த மீனை உண்டு மகிழ்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டார்கள்.

காஷ்மீரிகள் ஆர்ப்பாட்டத்திலும் கல்லெறிதலிலும் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலானவை ஒன்றில் துக்க அனுஷ்டானங்களாகவோ, மரண ஊர்வலங்களாகவோ, அல்லது “பாதுகாப்புப் படைகளின்” கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சிகளாகவோ தான் இருக்கின்றன.

எனினும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்த வண்ணம் இவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களின் சக குடிமக்களோ (இந்தியர்கள்), இந்த மக்கள் திரள் போராட்டங்களை ‘இந்தியா-எதிர்ப்பு’ பேரணிகள் என்று மட்டுமே பார்க்கிறார்கள். காஷ்மீரிகள் அனைவரையும் துரோகிகள் என்றும், பாகிஸ்தானியர்கள் என்றும், இன்னும் பலவிதமாகவும் கூறி சபிக்கிறார்கள்; கண்டிக்கிறார்கள்; முத்திரை குத்துகிறார்கள்.

காஷ்மீரில் நடந்து கொண்டிருப்பவையும், நாட்டின் பிற பகுதிகளில் அவற்றுக்கு ஆற்றப்படும் எதிர்வினைகளும் மேற்கூறிய நாட்டார் கதையிலிருந்து எவ்விதத்திலும் வேறுபடவில்லை.

காஷ்மீரிகள் அனைவரும் உயிர் பிழைப்பதற்காக தனது தாயின் பிணத்தை தின்ற அந்த மீனவனை போன்றவர்கள்; (இந்திய) சக குடிமக்களோ அந்நிகழ்வைப் பற்றி பிழையாக கற்பிதம் செய்து கொண்டு, அவன் பொறித்த மீனை உண்டு மகிழ்ந்திருப்பதாக “எண்ணும்” அண்டை அயலாரைப் போன்றவர்கள்.”

– டாக்டர் ஃபயாஸ் அஹ்மது பட்

கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் இறுதிப் பகுதியையே நான் இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன்.

http://www.countercurrents.org/2016/08/21/kashmir-a-cry-from-hell/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here