கிரிக்கட் ரசிகர்களின் மோதல் விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களே கைது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0
0
கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்­பெற்ற முறு­க­லை­ய­டுத்து ஏற்­பட்ட மோதல்­க­ளின்­போது  பொலிஸார் நியா­ய­மற்­ற­மு­றையில் நடந்­து­கொண்­ட­தா­கவும் குற்­றச்­சொ­யல்­களில் ஈடு­ப­டாத அப்­பாவி முஸ்லிம்  இளை­ஞர்­க­ளையே கைது செய்­துள்­ள­தா­கவும் மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் இடம்­பெற்ற நிகழ்வும் அதற்கு பின்னர் இடம்­பெற்ற சம்­ப­வங்­களும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.
மைதா­னத்தில் இடம்­பெற்ற இரு­வ­ருக்­கி­டை­யி­லான முறு­கலே பெரும் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மைதா­னத்தில் இருந்த தரப்­பி­ன­ரா­லேயே பள்­ளி­வா­ச­லுக்கு கல் எறி­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் மைதா­னத்­திற்கு வெளியில் இருந்­த­வர்­களால் விளை­யாட்­ட­ரங்கை நோக்கி கல் எறி­யப்­பட்­டுள்­ளது. இவர்­களை பொலி­ஸாரால் தடுத்­து­நி­றுத்த முடி­ய­வில்லை.
ஆனால் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பற்ற அப்­பாவி இளை­ஞர்கள் இரு­வரை மாளி­கா­வத்தை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இவர்கள் எந்­த­வி­த­மான தக­ரா­றிலும் ஈடு­ப­டாது கிரிக்­கெட்­போட்­டியை பார்க்கச் சென்­ற­வர்­களே. போட்­டியை கண்­டு­க­ளித்­து­விட்டு வெ ளியில் வரும்­போது அநி­யா­ய­மாக இவர்கள் கைதா­கி­யுள்­ளனர்.
எனவே இது விடயத்தில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பாவி இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Mujeebur Rahman 3 Mujeebur Rahman 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here