கிழக்கிலும் தெற்கிலும் நடக்கும் ஊர்வலங்கள் சட்டவிரோதமானவை

0
0

கிழக்கிலும் தெற்கிலும் இரவு வேளைகளிலும் பகல் நேரத்திலும் ஊர்வலங்கள் நடைபெறுவதாக எமக்குத் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நாம் பொலிசாருக்கு அறிவித்துள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கிழக்கின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அக்கரைப்பற்றுவில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அதாவுல்லா ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது ஆணைக்குழுத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்தப் பிரதேசங்களுக்கான வாக்கெடுப்பு தொடர்பில் நாம் மாற்று நடவடிக்கைகளைக் கையாள வேண்டி வரும். இத்தகைய ஊர்வலங்கள் தேர்தல்கள் சட்டத்தை மீறுவதாகும். பொலிஸ் ஒழுங்குவிதிகளையும் தனிமைப்படுத்தல் சட்டத்தையும் மீறுவதாகவும் இது அமைகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here