கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு அஸ்கிரிய மல்வத்து பீடங்களிலிருந்து நால்வர்

0
1

கிழக்கு மாகாண தொல்பொருள்களை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணிக்கு மேலும் நால்வர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் செயலணியின் அங்கத்தவர் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த நால்வரும் இணைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் இதற்கான விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்கிரிய பீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், மல்வத்து பீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுனே சுமங்கல தேரர், அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலணியில் தமிழ் பேசும் சமூகத்திலிருந்தும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்த போதும் இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here