குற்றங்கள் ஏதும் செய்யவில்லையென்றால் வாக்குமூலம் அளிக்க பயப்படத் தேவையில்லை : சம்பிக்க

0
0

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றங்கள் ஏதும் செய்யவில்லை என்றால் அவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்கு மூலம் அளிக்கவும் பயப்படத் தேவையில்லை, அடுத்தவர்கள் அதற்காக ஆர்ப்பாட்டம் செய்யத் தேவையுமில்லை என அமைச்சர் சம்பிக்க ரனவக்க தெரிவித்துள்ளார்.
இப்படியான ஒரு இக்கட்டான நிலையில் இந்தப் பிரச்சினை கிளரப்படுவது 19ஆம் திருத்த மூலத்தை பிற்போடுவதற்காகவா என்பது முக்கிய பிரச்சினையாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஸ ஒரு கடவுள் அல்ல. அவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்காக அழைத்தமைக்காக ஆர்ப்பாட்டம் செய்ய தேவையில்லை. எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here