குழைந்தைகளும் கார்டூன்களும்.

0
0

-பயூஸ் அஹ்மத்-
குழந்தைகள் கார்டூன்கள் பார்ப்பதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை கார்டூன்கள் குறித்து இதுவரை நடை பெற்றுள்ள சில ஆய்வுகளின் அடிப்படையில் விளக்குவதற்கு முயற்சிக்கும் இக்கட்டுரையில், கடந்த பகுதியில் அதன் சில நன்மைகள் குறித்து விளக்கினோம். மேலும் சில குறிப்புகள் இங்கு இடம்பெறுகின்றன. தொடர்ந்து கார்டூன்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் ஆராயவுள்ளோம்.

  1. காட்சி ஊடகக் கற்றலுக்கும் நிறங்களை இனங்காண்பதற்கும் உதவுகின்றது.

ஏனைய கற்றல் முறைகளை விட காட்சி ஊடகக் கற்றல் வினைத் திறன் கூடியது என்பதை விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதனால்தான் இன்று கற்பித்தலில் காட்சி ஊடகம் முதன்மைப் படுத்தப்படுகின்றது. பிள்ளைகள் நூல் களை வாசிக்க விரும்புவதில்லை. நாம் விரும்பும் ஒரு செய்தியை அவர்கள் மனதில் ஆழப் பதிக்க எண்ணினால் அதற் கென காட்சி ஊடகங்களில் ஒன்றான கார்டூன்களை சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

  1. புதிய விடயங்களைக் கற்பதற்கு.

காட்சி ஊடகங்கள் மூலம் கற்பது வினைத்திறன் மிக்கது என்பதுபோல காண்பயங்கள் (Visual) புதுப் புது விடயங்களை குழந்தைகள் கற்பதற்கு கார்டூன்கள் மூலம் வழிகாட்டலாம். இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள கார்டூன்களை பெற்றோர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

  1. அறிகை விருத்தியில் குழந்தைகளின் மொழி வளர்ச்சி முக்கிய இடம் வகிக்கின்றது.

முதல் மொழித் தளம் வலுவாக இருப்பது போன்றே இரண்டாம் மொழி களைக் கற்பதற்கான வாய்ப்புகளும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆரோக்கியமான புதிய அறிவை வழங்கக் கூடிய பண்பாடுகளுக்கு முரணில்லாத கார்டூன்களை குழந்தைகள் பார்ப்பதன் மூலம் பிற மொழிகளிலுள்ள சொற்கள், பிரயோகங்களோடு பரிச்சயம் ஏற்படுகின்றது. இது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றது.

  1. விசுவாசத்தை வளர்க்கின்றது.

நேர்ப்பாடான கார்டூன்களில் இடம் பெறும் கதாபாத்திரங்களுக்கு இடையில் நண்பர்கள், உறவினர்கள் என்ற வகையிலான உறவு முறைகள் பேணப்படுகின் றன. அன்புக்குரியவர்களிடம் விசுவாசமாக இருக்கும் காட்சிகள் சில பிரபல்ய மான கார்டூன்களில் இடம்பெறுகின்றன. கார்டூன்களைப் பார்க்கும் பிள்ளைகளிடம் நெருக்கத்திற்குரியவர்களிடம் விசுவாசமாக இருத்தல் வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.
இன்று கார்டூன்கள் பார்ப்பது குறித்து எதிரும் புதிருமான கருத்துக்கள் சமூகத்தில் முன்வைக்கப்படுகின்றன. சில பயிற்றுவிப்பாளர்கள் எல்லாக் கார்டூன்களும் இஸ்ரேலின் அல்லது யூதர்களின் தயாரிப்பு எனவும், அவற்றை நுகர்வது பல்வேறு வகையில் குழந்தையின் ஆளுமையை சிதைப்பதாகவும் தமது நிகழ்ச்சிகளில் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக, ஊடகங்களை -குறிப்பாக தொலைக்காட்சியையும் கார்டூன்களை யும்- குழந்தைகள் நுகர்வது பற்றிய ஒரு தெளிவான நிலைப்பாடு பெற்றோருக்கு அவசியம். என்ன வகையான கார்டூன் களை தமது குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதை பெற்றோரே தீர்மானிக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் உள்ள வர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மை கிடை யாது. அவர்கள் எதைப் பார்க்கின்றார் க@ளா அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பாங்கில் உள்ளனர்.
கார்டூனின் வகைகளைத் தீர்மானிக்கும் பெற்றோர், தமது குழந்தைகள் அவற்றைப் பார்ப்பதற்குரிய நேரத்தை யும் அதன் அளவையும் வரையறை செய்ய வேண்டும். சில கார்டூன்களில் குழந்தைகளுக்கு மேலதிக வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
மொத்தமாகவே கார்டூன்களை சியோனிஸ உற்பத்திகள் என்று புறக்கணிப்பது ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மை யையே புலப்படுத்தும். கார்டூன்களில் நாம் மேலே குறிப்பிட்ட நேர்ப்பாடான பயன்பாடுகள் உள்ளது போலவே, அவற்றை நுகரும் விதத்திலும் ஒதுக்கப்படும் நேரத்திலும் சில தீமைகளும் உள்ளன. அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதே புத்திசாலித்தனமானது.
கார்டூன் என்பது ஒரு சக்திவாய்ந்த ஊடகம். அதனை குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு நேர்ப்பாடான முறையில் பயன்படுத்த பெற்@றார்கள் ஏன் தயங்க வேண்டும். கார்டூன்களிலுள்ள தீமை களை வடிகட்டி விட்டால் குழந்தைகள் அதன் நல்ல பக்கத்தை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here