குவைத், ஈரானுக்கான விமானப் பயணங்களை இடைநிறுத்தியுள்ளது

0
3

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக குவைத் ஈரான் நாட்டுக்கான அனைத்து விமானப் பயணங்களையும் இடைநிறுத்தியுள்ளது. குவைத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அண்மையில் ஈரானுக்கு பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியவர்களாவர். இதன் மூலம் குவைத்தில் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 08 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்கள் தொகை 14 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலிய பொருளாதாரத்துக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கியுஸெப்பே கொன்ட் தெரிவித்தார்.

இத்தாலியில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் தொகை செவ்வாய் கிழமை (25) வரை 07 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 220 பேருக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here