கொன்சியூலர் பிரிவு 02 நாட்களுக்கு மூடப்படும்

0
2

கொவிட் 19 பரவலைத் தடுக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பிரிவில் வெளிநாடுகளில் மரணிப்பவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுதல், அது தொடர்பான ஆவணங்களைப் பெறுதல், ஏற்றுமதிப் பட்டியல்களைச் சான்றுப்படுத்தல் ஆகிய தேவைகளுக்காக மட்டும் கொன்சியூலர் பிரிவை அணுக முடியும்.

இந்தத் தேவைகளுக்காக அணுகுபவர்கள் மரணம் தொடர்பான விடயங்களுக்கு +94 (011) 233 8836/ +94 (011) 233 5942 என்ற இலக்கங்களையும் ஏற்றுமதிப் பட்டியல்களுக்கு +94 (011) 2338812 என்ற இலக்கத்தையும் தொடர்பு கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here