கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய செயலி

0
2

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைப்பேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால் இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த கைப்பேசி செயலி மூலம் கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களை தொலைவில் வைத்தே இனங்காண முடியும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், பொதுமக்களுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் கொவிட் தொற்றாளர்களை இனங்காணுவதற்காக இந்த செயலி ஊடாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறித்த செயலியை வேறு நாடுகளுக்காக பெற்றுக் கொடுப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here